மீண்டும் ரஞ்சித் - தினேஷ் கூட்டணி | ஐதராபாத்தில் துவங்கும் இந்தியன் 2 | லட்சுமி சிறந்த கலைஞர் என சொல்ல வேண்டும் : லட்சுமி பிரியா | 'பஜ்ரங்கி பைஜான்' சீன வசூல் ரூ.200 கோடி | கிரிக்கெட் பயிற்சிக்கு தயாராகும் துல்கர் சல்மான் | 28 ஆண்டுகள் கழித்து 2-ஆம் பாகத்தில் நடிக்கும் மம்முட்டி | பூமரம் ரிலீஸ் : பூரிப்பில் காளிதாஸ் | ராம் கோபால் வர்மாவை ஓய்வு பெற சொன்ன ராதிகா ஆப்தே | காமெடி கலந்த கதாநாயகியாக அதிதி மேனன் | மீண்டும் எடையை குறைக்கும் ஜூனியர் என்டிஆர் |
ராம்கோபால்வர்மா இயக்கிய ரக்த சரித்ரா என்ற படத்தில் தென்னிந்திய சினிமாவிற்கு அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. அதன்பிறகு தமிழில் பிரகாஷ்ராஜின் தோனி படத்தில் நடித்தார். ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்தது அவருக்கு பெரிய அங்கீகாரமாக கிடைத்தது. தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வித்தியாசமான வேடங்களில் நடித்து பெயர் வாங்கி வருகிறார்.
சமீபத்தில் ஒரு டாக் ஷோவில் கலந்து கொண்ட ராதிகா ஆப்தேவிடம், டோலிவுட்டில் ஓய்வுபெற வேண்டிய நடிகர், டைரக்டர் யார்? என்றொரு கேள்வி முன் வைக்கப்பட்டபோது, சற்றும் யோசிக்காமல் ராம்கோபால்வர்மா என்று கூறியிருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் ராதிகா ஆப்தேவை அறிமுகம் செய்ததே ராம் கோபால் வர்மா தான். அவரையே ஓய்வு பெற சொல்லியிருக்கிறார். ராதிகாவின் இந்த பதிலுக்கு என்ன மாதிரியான சர்ச்சை பதிலை அளிக்க போகிறாரோ ராம் கோபால் வர்மா.