மம்முட்டி படத்தில் வில்லனாக காளகேயா பிரபாகர் | திலீப் ஜோடியாக ஊர்வசி..? | நடிகர் கைது நிகழ்வுகளை கிண்டலடிக்கிறதா 'இறா' திரைப்படம்..? | புருவ அழகிக்கு பாலிவுட்டில் இருந்து அடுத்தடுத்து அழைப்பு | பிருத்விராஜ் படத்துடன் கூட்டணி வைத்த ஷாருக்கான் | மீண்டும் ஒரு மலையாள படத்தில் ஆர்.கே.சுரேஷ் | சாந்தனு-வுக்குக் கை கொடுக்கும் மிஷ்கின் ? | 'கொரில்லா' தாய்லாந்து படப்பிடிப்பு நிறைவு | சூர்யா-வின் 37வது படம், அரசியல் ஆக்ஷன் படம் ? | ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ஹன்சிகா |
இந்தியத் திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பாகுபலி 2' திரைப்படம் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியாகி வருகிறது. அந்த விதத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29ம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியிடப்பட்டது. அங்கு 'Baahubali: The Triumphant Return of the King' என்ற பெயரில் வெளியானது. படத்தைப் பார்த்த ஜப்பான் ரசிகர்கள், படத்தில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்களால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளார்கள்.
அந்த விதத்தில் படத்தில் இடம் பெற்றுள்ள பல கதாபாத்திரங்களைப் போல படங்கள் வரைவது, அவர்களைப் போல மேக்கப் போட்டுக் கொண்டு அவற்றையும் சமூக வலைத்தளங்களில் பகிர்வது என பல விஷயங்களைச் செய்து வருகிறார்கள். சிலர் அந்தத் தோற்றத்திலேயே தியேட்டர்களில் தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தியும் வருகிறார்கள்.
சமீபத்தில் டோக்கியோவில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க வந்த 800 பேர் ஒரே சமயத்தில் 'பாகுபலி, பாகுபலி' என ஆரவாரத்துடன், டார்ச் லைட் அடித்தும், கொண்டாட்டத்துடன் படத்தைப் பார்த்தது பற்றி ஜப்பான் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது போல பல நிகழ்வுகள் ஜப்பான் நாட்டில் நடந்து வருகிறதாம். ரஜினிகாந்த் நடித்த 'முத்து' படத்திற்குப் பிறகு 'பாகுபலி 2' படத்திற்குத்தான் இப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது என்கிறார்கள்.
படத்தின் வசூலைப் பற்றிக் கவலையில்லை, மக்கள் படத்தை எப்படி கொண்டாடி ரசிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என 'பாகுபலி 2' குழுவினர் ஜப்பான் ரசிகர்களின் கொண்டாட்டத்தில் மகிழ்ந்திருக்கிறார்கள். 'மகிழ்மதி' தந்த மகிழ்ச்சி...