மம்முட்டி படத்தில் வில்லனாக காளகேயா பிரபாகர் | திலீப் ஜோடியாக ஊர்வசி..? | நடிகர் கைது நிகழ்வுகளை கிண்டலடிக்கிறதா 'இறா' திரைப்படம்..? | புருவ அழகிக்கு பாலிவுட்டில் இருந்து அடுத்தடுத்து அழைப்பு | பிருத்விராஜ் படத்துடன் கூட்டணி வைத்த ஷாருக்கான் | மீண்டும் ஒரு மலையாள படத்தில் ஆர்.கே.சுரேஷ் | சாந்தனு-வுக்குக் கை கொடுக்கும் மிஷ்கின் ? | 'கொரில்லா' தாய்லாந்து படப்பிடிப்பு நிறைவு | சூர்யா-வின் 37வது படம், அரசியல் ஆக்ஷன் படம் ? | ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ஹன்சிகா |
திரைத்துறையில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதை வெளிப்படையாக கூறிவரும் நடிகைகளில் இலியானாவும் ஒருவர்.
இதுகுறித்து அவர் தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில், சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் உள்ளது. ஆனால் இதை வெளியில் சொன்னால் தங்களது கேரியர் போய் விடுமோ என்று யாரும் வெளியில் சொல்வதில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை இது ஒரு கோழைத்தனமான செயல்.
மேலும், பெரிய நடிகர்களுக்கு வெளியில் கடவுள் போன்றொரு பெரிய இமேஜ் இருந்து வருகிறது. ஆனால் அந்த நடிகர்களுக்கு ஒரு நிஜமுகம் உள்ளது. அந்த முகம் மக்களுக்குத் தெரியாது. எங்களைப்போன்ற நடிகைகளுக்குத்தான் தெரியும். அதனால் அவர்களின் முகத்திரையை கிழித்தெறிய அனைத்து நடிகைகளும் ஒன்று சேர வேண்டும் என்கிறார் இலியானா.