மம்முட்டி படத்தில் வில்லனாக காளகேயா பிரபாகர் | திலீப் ஜோடியாக ஊர்வசி..? | நடிகர் கைது நிகழ்வுகளை கிண்டலடிக்கிறதா 'இறா' திரைப்படம்..? | புருவ அழகிக்கு பாலிவுட்டில் இருந்து அடுத்தடுத்து அழைப்பு | பிருத்விராஜ் படத்துடன் கூட்டணி வைத்த ஷாருக்கான் | மீண்டும் ஒரு மலையாள படத்தில் ஆர்.கே.சுரேஷ் | சாந்தனு-வுக்குக் கை கொடுக்கும் மிஷ்கின் ? | 'கொரில்லா' தாய்லாந்து படப்பிடிப்பு நிறைவு | சூர்யா-வின் 37வது படம், அரசியல் ஆக்ஷன் படம் ? | ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ஹன்சிகா |
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன்-சூரியின் காமெடி கூட்டணி பெரிய அளவில் ஒர்க் அவுட்டானதைத் தொடர்ந்து அந்த படங்களை இயக்கிய பொன்ராம், தற்போது தான் இயக்கி வரும் சீமராஜா படத்திலும் அவர்களை இணைத்திருக்கிறார்.
கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்றது. அதற்காக கிராமத்து செட் அமைத்து படமாக்கினார். மேலும், அங்கு மாதக்கணக்கில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டதால், தினமும் படப்பிடிப்பு முடிந்ததும் சிவகார்த்திகேயன்-சூரி இருவரும் கிரிக்கெட் டீம் உருவாக்கி விளையாடி வந்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் ஒரு அணியாகவும், சூரி இன்னொரு அணியாகவும் விளையாடி வந்த இந்த கிரிக்கெட் விளையாட்டில் சீமராஜா படக்குழுவில் உள்ள பலரும் கலந்து கொண்டனர். ஆனால் சமந்தா கலந்து கொள்ளவில்லையாம். தனக்கு கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் இல்லை என்று சொல்லிக்கொண்டு அவர்கள் விளையாடுவதை அவர் வேடிக்கை மட்டுமே பார்த்தாராம்.