மம்முட்டி படத்தில் வில்லனாக காளகேயா பிரபாகர் | திலீப் ஜோடியாக ஊர்வசி..? | நடிகர் கைது நிகழ்வுகளை கிண்டலடிக்கிறதா 'இறா' திரைப்படம்..? | புருவ அழகிக்கு பாலிவுட்டில் இருந்து அடுத்தடுத்து அழைப்பு | பிருத்விராஜ் படத்துடன் கூட்டணி வைத்த ஷாருக்கான் | மீண்டும் ஒரு மலையாள படத்தில் ஆர்.கே.சுரேஷ் | சாந்தனு-வுக்குக் கை கொடுக்கும் மிஷ்கின் ? | 'கொரில்லா' தாய்லாந்து படப்பிடிப்பு நிறைவு | சூர்யா-வின் 37வது படம், அரசியல் ஆக்ஷன் படம் ? | ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ஹன்சிகா |
சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர் நடிக்கும் படம் 'கண்ணே கலைமானே'. கடந்த ஜனவரி மாதத்தில் ஆரம்பமான படப்பிடிப்பு அதற்குள்ளாக நிறைவடைய இருக்கிறது.
உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக முதல் முறையாக நடிக்கும் தமன்னா இப்படம் பற்றி கூறியிருப்பதாவது, “நாட்கள் சீக்கிரமே கடந்துவிட்டன. நாங்கள் படப்பிடிப்பை சீக்கிரமே முடிக்க இருக்கிறோம். மீண்டும் சீனு சார் இயக்கத்தில் நடிப்பது, சொல்ல முடியாத ஒரு புரிதல். முற்றிலும் ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு. உதயநிதி ஒரு உணர்ச்சிகரமான நடிகர். அவரை இந்தப் படத்தில் அனைவரும் ரசிப்பார்கள். இப்படத்தில் நடிப்பது பெரும் மகிழ்ச்சி. ஜலேந்தர் சார் அழகான காட்சிகளைக் கொடுத்துள்ளார். சில படங்கள் நம் நினைவுகளை மீண்டும் வரவைக்கும், அப்படிப்பட்ட படம்தான் இந்தப் படமும்,” என தமன்னா கூறியுள்ளார்.
இவ்வளவு சீக்கிரத்தில் படத்தை எடுத்து முடித்திருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். சரியான திட்டமிடல் இருந்தால் தயாரிப்பாளரையும் காப்பாற்றலாம் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணமாக அமையும் என படக்குழுவினரைப் பலரும் பாராட்டுகிறார்கள்.