மம்முட்டி படத்தில் வில்லனாக காளகேயா பிரபாகர் | திலீப் ஜோடியாக ஊர்வசி..? | நடிகர் கைது நிகழ்வுகளை கிண்டலடிக்கிறதா 'இறா' திரைப்படம்..? | புருவ அழகிக்கு பாலிவுட்டில் இருந்து அடுத்தடுத்து அழைப்பு | பிருத்விராஜ் படத்துடன் கூட்டணி வைத்த ஷாருக்கான் | மீண்டும் ஒரு மலையாள படத்தில் ஆர்.கே.சுரேஷ் | சாந்தனு-வுக்குக் கை கொடுக்கும் மிஷ்கின் ? | 'கொரில்லா' தாய்லாந்து படப்பிடிப்பு நிறைவு | சூர்யா-வின் 37வது படம், அரசியல் ஆக்ஷன் படம் ? | ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ஹன்சிகா |
பிருத்விராஜ்-பார்வதி நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'மை ஸ்டோரி'. ரோஷினி தினகர் என்கிற பெண் இயக்குனர் இந்தப்படத்தை தயாரித்து இயக்குகிறார். தமிழிலிருந்து நடிகர் கணேஷ் வெங்கட்ராம் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் இயக்குனருக்கும் பிருத்விராஜூக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும், பின்னர் அவை சமரசம் செய்யப்பட்டு தற்போது இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது.
இந்தப்படத்தில் விஎப்எக்ஸ் பணிகள் ரொம்பவே இடம்பிடித்துள்ளன. இந்த பணிகளை ரெட் கலர் விஎப் எக்ஸ் நிறுவனம் கவனித்து வருகிறது. இது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மனைவி கௌரியுடன் இணைந்து நடத்திவரும் ரெட் சில்லீஸ் நிறுவனத்தின் ஒரு கிளை நிறுவனமாகும்.