லக்னோ : பாலிவுட் மாஜி நடிகையும், சமாஜ்வாதி மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெயா பச்சனுக்கு, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி, ஜெயா பச்சன், 69. சமாஜ்வாதியை சேர்ந்த ராஜ்யசபா, எம்.பி.,யான இவரது பதவிக் காலம் நிறைவடைவதை அடுத்து, இம்மாதம் நடக்கும்
தேர்தலில் போட்டியிட, கட்சியின் சார்பில், அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு
இதற்கான வேட்பு மனுத் தாக்கலில், தன் மற்றும் கணவர் பெயரில் உள்ள சொத்துக்களை குறிப்பிட்டுள்ளார். அதன்படி, தனக்கும், தன் கணவருக்கும், 460 கோடி ரூபாய் மதிப்பிலான, அசையா சொத்துகள் மற்றும், 540 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாக தெரிவித்துஉள்ளார்.
கடந்த, 2012ல், சமாஜ்வாதி சார்பில், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட, ஜெயா பச்சன், 152 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும், 343 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
பணக்கார எம்.பி.,
பா.ஜ.,வை சேர்ந்த, ராஜ்யசபா, எம்.பி., ரவீந்த கிஷோர் சின்ஹா, 2014ல், தனக்கு, 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்து இருந்தார். தற்போது, ஜெயா பச்சன், ராஜ்யசபா உறுப்பினராக மீண்டும் தேர்வாகும் பட்சத்தில், அதிக சொத்துகள் உடைய, எம்.பி.,யாக இவரே இருப்பார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து