அமெரிக்கா பயணமாகும் ரஜினி | நிர்வாணமாகவும் நடிக்க தயார் : ஆண்ட்ரியா | அஜித் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேவி கணவர்? | காலாவால் பெரும் லாபம் : ரஜினி குடும்பம் மகிழ்ச்சி | பாலியல் சீண்டலுக்கு உள்ளான சின்மயி | அமிதாப் குணமடைய ரஜினி பிரார்த்தனை | சென்னை தெருக்களில் தர்பூசணி விற்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் | ஹன்சிகா மீது புகார் | லைகா தயாரிப்பில் சூர்யா - கேவி ஆனந்த் படம் | பாலா படத்தில் மகள் அறிமுகம் : கவுதமி மறுப்பு |
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகையில், சினிமாவில் இருக்கும் பிரபலங்களும் பாலியல் தொல்லை மற்றும் சீண்டல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகைகள் அமலாபால், சனுஷா போன்றவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானார்கள்.
இந்நிலையில், பிரபல பின்னணி பாடகியான சின்மயி, தானும் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். அவர் தன் டுவிட்டர் பதிவில், பொது நிகழ்ச்சி ஒன்றில் பாலியல் சீண்டலுக்கு உள்ளானேன். இதை நான் இன்ஸ்டிராகிராமில் பகிர்ந்த போது அதிர்ச்சியாக இருந்தது. பல ஆண்களும், பெண்களும் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை பகிர்ந்தார்கள்.
இதில் பெரும்பாலும் குடும்ப உறவுகளாலும், பயணங்களிலும், நெருங்கிய நண்பர்களும் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது பெரும்பாலும் அதை வெளியில் சொல்ல தயங்குகிறார்கள்.
குறிப்பாக பெண்கள் தங்கள் பெற்றோர்களிடம் சொல்ல பயப்படுகிறார்கள். இதனால் படிப்பதையோ, வேலைக்கு போவதையோ நிறுத்தி விடுவார்களோ என அஞ்சுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
இவ்வாறு சின்மயி கூறியுள்ளார்.