அமிதாப் குணமடைய ரஜினி பிரார்த்தனை | சென்னை தெருக்களில் தர்பூசணி விற்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் | ஹன்சிகா மீது புகார் | லைகா தயாரிப்பில் சூர்யா - கேவி ஆனந்த் படம் | பாலா படத்தில் மகள் அறிமுகம் : கவுதமி மறுப்பு | விவசாயம் செய்ய விரும்பும் சிவகார்த்திகேயன் | அடிமையாகவே இருப்பதா : தயாரிப்பாளர் ஆவேசம் | ரஜினி, கமலுக்கு...! - ஒரு தயாரிப்பாளரின் குமுறல் | சின்னத்திரையை பெரிய திரையாக கருதும் செம்பா | விஸ்வரூபம் 2 வேலைகள் ஜரூர் |
தமிழ் சினிமா ஒருவரை உச்சத்தில் அமர்த்தி அழகு பார்த்திருக்கிறது. அதேசமயம், பெரும் ஆழத்தில் கொண்டு போய் அமுக்கியும் விட்டுள்ளது. இங்கே நாம் சொல்லப்போகும் நடிகர், இரண்டாவது ரகத்தை சேர்ந்தவர்.
சுமார் 100 படங்களில் முகம் தெரிந்தும், தெரியாமலும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்துள்ளார் சிவா. நெல்லையை சொந்த ஊராக கொண்ட சிவா, சினிமா ஆசையில் 20 ஆண்டுகளுக்கு முன் கோடம்பாக்கம் வந்தவர். ஆரம்பகாலத்தில் கூட்டத்தில் ஒருவராக, ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக சில படங்களில் நடித்தார்.
தாய் - தந்தையை இழந்து சென்னையில் 2000 ரூபாய்க்கு ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி வருகிறார். சமுத்திர கனியுடன் ஒரு படம், இமான் அண்ணாச்சியுடன் சில படங்கள், அருள், திருப்பாச்சி, பகவதி, தூள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நடிகர்களுக்கு உதவியாளராக குடைபிடிப்பது, கண்ணாடி காட்டுவது போன்ற வேலைகளை செய்வார். அதற்கு ஒருநாள் பேட்டா 550 ரூபாய் தருவார்களாம். இந்த வேலையும் தினமும் இருக்காது. ஆகையால், வேலை இல்லாமல் சும்மா இருக்க வேண்டாம் என கருதி, சென்னை, கோயம்பேடு மார்கெட்டிற்கு அதிகாலை சென்று தர்பூசணி பழங்கள் வாங்கி வந்து, சாலிகிராமம் பகுதி முழுக்க தெருத்தெருவாக விற்பனை செய்து வருகிறார்.
35 வயதாகும் சிவாவிற்கு இன்னும் திருமணமாகவில்லை. தன்னுடன் பிறந்த தம்பி, தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அவ்வப்போது செய்து வருகிறார்.
எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறீர்கள், எப்படி செட்டில் ஆவீர்கள் என்று கேட்டால் வாழ்க்கை போகும் போக்கில் போகிறேன். யாரிடமும் கையேந்தி நிற்க கூடாது, நாலு காசு சம்பாதித்து சொந்த காலில் நிற்க வேண்டும் என நம்பிக்கையுடன் கூறுகிறார்.
2002-ம் ஆண்டு தன்னுடைய சொந்த காசில் ரூ.5000 கொடுத்து நடிகர் சங்க உறுப்பினராகி உள்ளார். இவரைப்போன்று கஷ்டப்படுவர்களை கவனிக்குமா நடிகர் சங்கம்.