அமெரிக்கா பயணமாகும் ரஜினி | நிர்வாணமாகவும் நடிக்க தயார் : ஆண்ட்ரியா | அஜித் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேவி கணவர்? | காலாவால் பெரும் லாபம் : ரஜினி குடும்பம் மகிழ்ச்சி | பாலியல் சீண்டலுக்கு உள்ளான சின்மயி | அமிதாப் குணமடைய ரஜினி பிரார்த்தனை | சென்னை தெருக்களில் தர்பூசணி விற்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் | ஹன்சிகா மீது புகார் | லைகா தயாரிப்பில் சூர்யா - கேவி ஆனந்த் படம் | பாலா படத்தில் மகள் அறிமுகம் : கவுதமி மறுப்பு |
விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில், விசுவாசம் என்ற படத்தில் நடிக்கிறார் அஜித். சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிக்கிறார். அஜித்துடன் நயன்தாரா, யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. ஆனால் தமிழ் திரையுலகம் ஸ்டிரைக்கால் இப்படம் துவங்குவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.
இதனிடையே, அஜித்தின் அடுத்தப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் படங்களின் இயக்குநர் வினோத் இயக்குவதாக தகவல் வெளியான நிலையில் இந்தப்படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அஜித், ஸ்ரீதேவி இடையே நல்ல நட்பு இருந்தது. அதனால் தான் ஸ்ரீதேவியின் ரீ-என்ட்ரி படமான இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஸ்ரீதேவி கேட்டு கொண்டதால் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் அஜித். அந்த நட்பின் அடையாளமாக போனி கபூரின் தயாரிப்பில் அஜித் நடிக்க சம்மதம் சொல்லியிருப்பதாக தெரிகிறது.
சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீதேவியின் அஞ்சலி கூட்டம் சென்னையில் நடந்தது. அஜித், ஷாலினி இருவரும் போனி கபூர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். அந்த சந்திப்பின் போதே, அஜித்தின் படம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.