லைகா தயாரிப்பில் சூர்யா - கேவி ஆனந்த் படம் | பாலா படத்தில் மகள் அறிமுகம் : கவுதமி மறுப்பு | விவசாயம் செய்ய விரும்பும் சிவகார்த்திகேயன் | அடிமையாகவே இருப்பதா : தயாரிப்பாளர் ஆவேசம் | ரஜினி, கமலுக்கு...! - ஒரு தயாரிப்பாளரின் குமுறல் | சின்னத்திரையை பெரிய திரையாக கருதும் செம்பா | விஸ்வரூபம் 2 வேலைகள் ஜரூர் | ஓவியாவின் வருத்தம் | கிசுகிசுக்களில் சிக்கிய சாய் பல்லவி | அமீர்கான் படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக் குறைவு |
டிஜிட்டல் கட்டணத்தை எதிர்த்து தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள போராட்டத்தால் ஒட்டுமொத்த சினிமா துறையும் முடங்கி போய் உள்ளது. வருகிற 16-ம் தேதி முதல் இது மேலும் தீவிரமடைய இருக்கிறது.
இந்த விஷயத்தில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோர்கள் குரல் கொடுக்க வேண்டும் என கோடம்பாக்கத்தில் பரவலாக பேச தொடங்கியுள்ளனர்.
தங்கமீன்கள், தரமணி போன்ற தரமான படங்களை எடுத்த தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார், இந்த விவகாரத்தில் ரஜினி, கமல் தலையிட வேண்டும் என அவர்களின் பெயரை குறிப்பிடாமல் டுவிட்டரில் வேண்டுகோள் வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
அரசியலுக்கு உயர்த்திக் கொண்ட உச்ச நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகள். ஏற்றி விட்ட ஏணி இப்போது சீக்கு வந்த யானையாக தவிக்கிறது. நீங்கள் இருவரும் ஆண்டு அனுபவித்து ஆஸ்தி சேர்க்க அனைத்துமாக இருந்த திரைத்துறையின் இன்றைய இன்னல்களை உங்கள் சேவையால், பார்வையால் காப்பாற்ற ஏதேனும் செய்து விட்டு உங்கள் அரசியல் பயணத்தை துவங்குங்கள். நாங்கள் உடன் இருப்போம். யோசித்து உடனே வாருங்கள். கவலையோடு அல்லாடிக் கொண்டிருக்கிறது கலைக்குடும்பம்... கோடம்பாக்க சேவையே இப்போதைய தேவை.
இவ்வாறு சதீஷ் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சதீஷ் அளித்துள்ள மற்றொரு பேட்டியில், "இந்த ஸ்டிரைக் நடக்கும்போதே எல்லாவற்றுக்கும் சேர்த்து ஸ்டிரைக் நடத்த வேண்டும். குறிப்பாக நடிகர்கள், இயக்குநர்கள் சம்பளத்தையும் முறைப்படுத்த வேண்டும். குறிப்பாக மற்ற மாநிலங்களில் இருப்பது போன்று குறிப்பிட்ட ஒரு தொகையை சம்பளமாக நிர்ணயித்து படம் வெளியான பின்னர் அதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை தரலாம்" என கூறியுள்ளார்.