அமெரிக்கா பயணமாகும் ரஜினி | நிர்வாணமாகவும் நடிக்க தயார் : ஆண்ட்ரியா | அஜித் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேவி கணவர்? | காலாவால் பெரும் லாபம் : ரஜினி குடும்பம் மகிழ்ச்சி | பாலியல் சீண்டலுக்கு உள்ளான சின்மயி | அமிதாப் குணமடைய ரஜினி பிரார்த்தனை | சென்னை தெருக்களில் தர்பூசணி விற்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் | ஹன்சிகா மீது புகார் | லைகா தயாரிப்பில் சூர்யா - கேவி ஆனந்த் படம் | பாலா படத்தில் மகள் அறிமுகம் : கவுதமி மறுப்பு |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போது சீமராஜா, ரவிக்குமார் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், நடிகர் ஆரி ஏற்பாடு செய்திருந்த விவசாயம் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் சிவகார்த்திகேயன்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், என்னுடைய மகளுக்கு இதுவரை பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை வழங்கியது இல்லை. அப்படியிருக்கையில் நான் எப்படி அந்த மாதிரியான விளம்பர படங்களில் நடிக்க முடியும். இங்கே சொன்ன விஷயங்களை பார்க்கும் போது எனக்கு விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. தற்போது என் வீட்டில் கொய்யா, சப்போட்டோ போன்ற மரங்களை வளர்த்து வருகிறேன். எதிர்காலத்தில் இதை விட இன்னும் பெரிதாக விவசாயம் செய்ய ஆசைப்படுகிறேன்.
இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.