புதுடில்லி : ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற, வி.வி.ஐ.பி.,க்கள் பயன்படுத்துவதற்காக, இரு தனி விமானங்கள், சிறப்பு வசதிகளுடன் தயாராகி வருகின்றன. 2020ல், இது பயன்பாட்டுக்கு வரும்.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற, வி.வி.ஐ.பி.,க்கள் பயணத்துக்காக, தற்போது, 'ஏர் - இந்தியா'வின், 'போயிங் - 747' ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.வி.வி.ஐ.பி.,க்களுக்கு என, தனியாக விமானம் வாங்க, அரசு திட்டமிட்டு உள்ளது.
இந்நிலையில், போயிங் நிறுவனத்திடம் இருந்து, 68 விமானங்களை வாங்க, ஏர் - இந்தியா நிறுவனம், 2006ல் ஒப்பந்தம் செய்தது. அதில், கடைசி மூன்று விமானங்கள், சமீபத்தில் வந்துசேர்ந்தன. இதில், போயிங் 747 - 300 ரக விமானங்கள் இரு, வி.வி.ஐ.பி.,க்கள் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட உள்ளன.
இந்த இரு விமானங்களை, ஏர் - இந்தியாவிடம் இருந்து, மத்திய அரசு வாங்க உள்ளது. வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், இதற்காக, 4,469 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.இந்த இரு விமானங்களில், வி.ஐ.பி.,க்களுக்கு என, தனி அறை, நிருபர்கள் சந்திப்பு நடத்துவதற்கான வசதி, அவசர கால மருத்துவ சிகிச்சை வசதி உட்பட, பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.
மேலும், ஏவுகணைகள் தாக்குதலை சமாளிக்கும் திறனுடன் கூடியதாக, இந்த இரு விமானங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.அதற்காக, ஜூன் மாதம்,
அமெரிக்காவில் உள்ள போயிங் நிறுவனத்துக்கு, இவை அனுப்பி வைக்கப்பட உள்ளன. 2020ல், இவை பயன்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 44 விமானிகள் பட்டியல் தயாரிக்கப்படும். இதில், குறைந்தபட்சம், நான்கு பேர், எப்போதும் டில்லியில் தயார் நிலையில் இருப்பர். அதே போல், விமான பராமரிப்புக்கென, தனி குழு அமைக்கப்பட உள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (1)
Reply