சந்தானம் படத்தை தயாரிக்கும் பிரபுதேவா | அஜித்துடன் படம் முழுக்க பயணிக்கும் ரோபோ சங்கர் | வெள்ளிக்கிழமை முதல் தியேட்டர்கள் மூடல்? | டீசரில் பெண் உருவத்தில் அசர வைத்த ஜெயசூர்யா | ஒடியன் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பீட்டர் ஹெய்ன் | காளிதாஸ் ஜெயராமுக்கு அம்மா சொன்ன அறிவுரை | நிவின்பாலி பட காட்சியை நிஜமாக்கிய திருடன் | ரொமான்ட்டிக்கில் போட்டிபோட தயாராகும் ஹீரோவும், இயக்குனரும் | நோட்டாவுக்கு நோ சொன்னதா தயாரிப்பாளர் சங்கம் ? | நான் தானே உங்க கூட வர்றேன் : இளையராஜா மகிழ்ச்சி |
அஜித் - சிறுத்தை சிவா இருவரும் நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் 'விசுவாசம்'. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில். தம்பி ராமையா, யோகிபாபு என ஏற்கனவே இரண்டு காமெடியன்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் லேட்டஸ்டாக ரோபோ சங்கரும் தற்போது விசுவாசம் படத்தில் இணைந்துள்ளார்.
அஜித்தின் நண்பராக படம் முழுக்க அவர் கூடவே வரும் காமெடி கேரக்டரில் நடிக்கிறார் ரோபோ சங்கர். இந்தப்படத்தில் நடிப்பதற்காக சுமார் 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ரோபோ சங்கர்.
இதுவரைக்கும் நான் அஜித்தை நேரில் பார்த்தது இல்லை. முதல்நாள் ஷூட்டிங்கில்தான் பார்க்கப் போறேன். பயங்கர எதிர்பார்ப்போடவும், ஆவலுடன் அவரைப் பார்க்கக் காத்திருக்கேன். என்கிறார் ரோபோ சங்கர்.
சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு விருது விழாவில் நடிகர் விஜய்யிடம் உங்கள் அடுத்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுங்க என்று பகிரங்கமாக கேட்டார் ரோபோ சங்கர். இந்தச்சூழலில் அஜித்தின் விசுவாசம் படத்தில் ரோபோ சங்கருக்கு சான்ஸ் கிடைத்திருக்கிறது. இயக்குநர் சிவாவிடம், அஜித்தே கேட்டு கொண்டதால் இந்த வாய்ப்பை பெற்றாராம் ரோபோ சங்கர்.