16 தேதி முதல் திட்டமிட்டபடி ஸ்டிரைக் | ரஜினி நழுவுகிறார் : கமல் விமர்சனம் | அறிவழகன் கேட்ட அறிவுப்பூர்வமான கேள்வி | வெப் சீரியலில் நடிக்கிறார் பாபி சிம்ஹா | சந்தானம் படத்தை தயாரிக்கும் பிரபுதேவா | அஜித்துடன் படம் முழுக்க பயணிக்கும் ரோபோ சங்கர் | வெள்ளிக்கிழமை முதல் தியேட்டர்கள் மூடல்? | டீசரில் பெண் உருவத்தில் அசர வைத்த ஜெயசூர்யா | ஒடியன் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பீட்டர் ஹெய்ன் | காளிதாஸ் ஜெயராமுக்கு அம்மா சொன்ன அறிவுரை |
சென்னை: திட்டமிட்டபடி 16ம் தேதி முதல் ஸ்டிரைக் நடைபெறும் என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், ‛டிஜிட்டல் நிறுவன கட்டண பிரச்னை, சினிமா டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்த ஸ்டிரைக், திட்டமிட்டபடி 16ம் தேதி முதல் நடைபெறும் எனத் தெரிவித்தார். மேலும் வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் நடக்கும் படப்பிடிப்புகள் 23ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாகவும் இந்த போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை காலவரையறை இன்றி நடக்கவிருப்பதாகவும் அறிவித்தார். இக்கூட்டத்தில் செயலாளர்கள் கதிரேசன் , துரைராஜ் , பொருளாளர் S.R. பிரபு , முன்னாள் நிர்வாகிகள் தாணு , S.A.சந்திரசேகர் , R.K.செல்வமணி , T.சிவா , எடிட்டர் மோகன் , A.L. அழகப்பன் , K.ராஜன் , TG தியாகராஜன் ,
மற்றும் தயாரிப்பாளர்கள் சுந்தர்.C , பாண்டிராஜ் , மைகேல் ராயப்பன் , தங்கர்பச்சன் , R.D.ராஜா , A.L. உதயா ,கபார் , P.L. தேனப்பன் , அருண்விஜய் , S.மதன் , வெங்கட் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உடல் நிலையில் சரியில்லாததால் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.