16 தேதி முதல் திட்டமிட்டபடி ஸ்டிரைக் | ரஜினி நழுவுகிறார் : கமல் விமர்சனம் | அறிவழகன் கேட்ட அறிவுப்பூர்வமான கேள்வி | வெப் சீரியலில் நடிக்கிறார் பாபி சிம்ஹா | சந்தானம் படத்தை தயாரிக்கும் பிரபுதேவா | அஜித்துடன் படம் முழுக்க பயணிக்கும் ரோபோ சங்கர் | வெள்ளிக்கிழமை முதல் தியேட்டர்கள் மூடல்? | டீசரில் பெண் உருவத்தில் அசர வைத்த ஜெயசூர்யா | ஒடியன் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பீட்டர் ஹெய்ன் | காளிதாஸ் ஜெயராமுக்கு அம்மா சொன்ன அறிவுரை |
காவிரி விவகாரம் மட்டுமல்ல பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ரஜினி நழுவுகிறார் என நடிகர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய பின்னர், நாட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தை பற்றியும் குரல் கொடுத்து வருகிறார்.
தேனி மாவட்டம் குரங்கணியில் நடந்த கோர சம்பவத்திற்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்தார். அதில், "குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என கூறியிருந்தார்.
தொடர்ந்து இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், யாரும் எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவம். அரசு தன் பணிகளை சிறப்பாக செய்தது. எல்லா நேரத்திலும் அரசை விமர்சிப்பது சரியாக இருக்காது. நம் நாட்டுக்கு என்ன செய்ய முடியுமோ, அந்தளவுக்கு மீட்பு பணிகள் நடந்தன. பெற்றோர்களுக்கு அனுதாபம்.
50 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பதை, என் நண்பர்கள் வாயிலாக பார்த்திருக்கிறேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இளைஞர்கள். எதிர்காலத்தின் ஒரு பகுதியை தீக்கிரையாக்கிவிட்டோம்.
டிரக்கிங் செய்வது தவறல்ல, அது நடக்கத்தான் வேண்டும், ஆனால் பாதுகாப்பாக நடக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. வனப்பகுதியில் நாம் அஜாகிரதையாக இருக்கிறோம். புகைப்பிடித்துவிட்டு அது அணைக்காமல் போடுவது, மதுகுடித்துவிட்டு பாட்டில்களை உடைப்பது போன்ற செயல்களால் விலங்குகள் தான் பாதிக்கப்படுகின்றன. நமக்கும் கொஞ்சம் பொறுப்பு வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
கமலிடத்தில் காவிரி விவகாரத்தில் ரஜினி பதில் சொல்ல மறுக்கிறாரே என செய்தியாளர்கள் கேட்டபோது, காவிரி விவகாரம் மட்டுமல்ல, பல கேள்விகளுக்கு ரஜினி பதிலளிக்காமல் சென்று விடுகிறார் என்றார்.