டீசரில் பெண் உருவத்தில் அசர வைத்த ஜெயசூர்யா | ஒடியன் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பீட்டர் ஹெய்ன் | காளிதாஸ் ஜெயராமுக்கு அம்மா சொன்ன அறிவுரை | நிவின்பாலி பட காட்சியை நிஜமாக்கிய திருடன் | ரொமான்ட்டிக்கில் போட்டிபோட தயாராகும் ஹீரோவும், இயக்குனரும் | நோட்டாவுக்கு நோ சொன்னதா தயாரிப்பாளர் சங்கம் ? | நான் தானே உங்க கூட வர்றேன் : இளையராஜா மகிழ்ச்சி | 'கபாலி' சாதனையைக் கடந்த 'காலா' | விவசாயத்தோடு அரசியலும் பேசும் விஜய் 62 | துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் கவுதமியின் மகள் சுப்புலட்சுமி? |
நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் துபாயில் மரணம் அடைந்தார். 3 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மும்பை கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. தொடர்ந்து சென்னையில் அவரது அஸ்தி கடலில் கரைக்கப்பட்டது.
ஸ்ரீதேவிக்கு தெலுங்கு திரையுலகம் சார்பில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அதேப்போன்று சென்னையில், நேற்று ஸ்ரீதேவிக்கு அஞ்சலி கூட்டம் நடந்தது. சென்னையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடந்த இந்த கூட்டத்தில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோருடன் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் குடும்பத்தார், அரசியல் பிரமுகர் அமர் சிங் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
பழம்பெரும் நடிகை லதா, தயாரிப்பாளர் தாணு, ஏ.ஆர்.ரஹ்மான், இவரின் மனைவி, மீனா, ராதிகா, வினித், கே.எஸ்.ரவிக்குமார், சுஹாசினி, சோனியா அகர்வால், பிரபுதேவா, ஸ்ரீகாந்த், குட்டி பத்மினி, ரோகினி, பாக்யராஜ், கார்த்தி, சினேகா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் பங்கேற்று ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவரின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினர்.
ஸ்ரீதேவி அஞ்சலி கூட்டம் நடந்த ஹால் முழுக்க வண்ண மலர்கள் அங்கரிக்கப்பட்டிருந்தது.