சந்தானம் படத்தை தயாரிக்கும் பிரபுதேவா | அஜித்துடன் படம் முழுக்க பயணிக்கும் ரோபோ சங்கர் | வெள்ளிக்கிழமை முதல் தியேட்டர்கள் மூடல்? | டீசரில் பெண் உருவத்தில் அசர வைத்த ஜெயசூர்யா | ஒடியன் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பீட்டர் ஹெய்ன் | காளிதாஸ் ஜெயராமுக்கு அம்மா சொன்ன அறிவுரை | நிவின்பாலி பட காட்சியை நிஜமாக்கிய திருடன் | ரொமான்ட்டிக்கில் போட்டிபோட தயாராகும் ஹீரோவும், இயக்குனரும் | நோட்டாவுக்கு நோ சொன்னதா தயாரிப்பாளர் சங்கம் ? | நான் தானே உங்க கூட வர்றேன் : இளையராஜா மகிழ்ச்சி |
ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், மலையாளத்தில் முதன்முதலாக நடித்துள்ள பூமரம் படம் ஒருவழியாக வரும் மார்ச்-16ல் வெளியாக இருப்பதாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இதிலும் மாற்றம் வந்தால் அதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் பலமுறை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளார் காளிதாஸ் ஜெயராம்.
ஆனால் இவற்றில் எல்லாம் மனதை போட்டு குழப்பி கொள்ள கூடாது என காளிதாஸ் ஜெயராமுக்கு அவரது அம்மாவும், முன்னாள் நடிகையுமான பார்வதி அறிவுரை கூறியுள்ளாராம்.
“உன் தலைக்கு மேலே நிழலுக்காக ஒரு கூரை இருக்கிறது. உன்னுடைய உணவும் உனக்கு ஒரு பிரச்சனையாக இருக்கப்போவதில்லை. ஆகவே நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொள். பணத்தை பற்றியோ, நேரத்தை பற்றியோ ஒருபோதும் கவலைப்பட கூடாது” என மகனுக்கு தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளை ஒரு தாயின் நிலையில் இருந்து கூறியுள்ளார் பார்வதி.