சந்தானம் படத்தை தயாரிக்கும் பிரபுதேவா | அஜித்துடன் படம் முழுக்க பயணிக்கும் ரோபோ சங்கர் | வெள்ளிக்கிழமை முதல் தியேட்டர்கள் மூடல்? | டீசரில் பெண் உருவத்தில் அசர வைத்த ஜெயசூர்யா | ஒடியன் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பீட்டர் ஹெய்ன் | காளிதாஸ் ஜெயராமுக்கு அம்மா சொன்ன அறிவுரை | நிவின்பாலி பட காட்சியை நிஜமாக்கிய திருடன் | ரொமான்ட்டிக்கில் போட்டிபோட தயாராகும் ஹீரோவும், இயக்குனரும் | நோட்டாவுக்கு நோ சொன்னதா தயாரிப்பாளர் சங்கம் ? | நான் தானே உங்க கூட வர்றேன் : இளையராஜா மகிழ்ச்சி |
நிவின்பாலி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் 'ஆக்சன் ஹீரோ பிஜூ'. ஒரு போலீஸ் அதிகாரியின் தினசரி வாழ்க்கை முறையையும், ஒரு போலீஸ் ஸ்டேஷனின் அன்றாட நிகழ்வுகளையும் வைத்து சுவாரஸ்யமாக படமாக்கியிருந்தனர்.
இதில் போலீஸ்காரர் ஒருவரிடம் இருந்த வயர்லஸ் செட்டை திருடன் ஒருவன் திருடிக்கொண்டு அவரை நன்றாக அலைய விடுவான். மேலும் வயர்லெஸ்சில் உயர் அதிகாரிகளின் உத்தரவுகள் வரும் சமயத்தில் குறுக்கே நுழைந்து கலாட்டா செய்வான்.. போலீஸார் அவனை கண்டுபிடிக்க ரொம்பவே சிரமப்படுவதாக படத்தில் காட்சிகள் அமைத்திருந்தார்கள்.
இப்போது இதேபோன்று நிஜத்திலும் கண்ணூர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்துள்ளது. போலீஸ்காரர் ஒருவரிடமிருந்து வயர்லெஸ் கருவியை திருடிய திருடன் ஒருவன், போலீஸ் உயர் அதிகாரியை கெட்டவார்த்தையால் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுவரை அந்த திருடன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார்களாம் போலீஸார்.