சந்தானம் படத்தை தயாரிக்கும் பிரபுதேவா | அஜித்துடன் படம் முழுக்க பயணிக்கும் ரோபோ சங்கர் | வெள்ளிக்கிழமை முதல் தியேட்டர்கள் மூடல்? | டீசரில் பெண் உருவத்தில் அசர வைத்த ஜெயசூர்யா | ஒடியன் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பீட்டர் ஹெய்ன் | காளிதாஸ் ஜெயராமுக்கு அம்மா சொன்ன அறிவுரை | நிவின்பாலி பட காட்சியை நிஜமாக்கிய திருடன் | ரொமான்ட்டிக்கில் போட்டிபோட தயாராகும் ஹீரோவும், இயக்குனரும் | நோட்டாவுக்கு நோ சொன்னதா தயாரிப்பாளர் சங்கம் ? | நான் தானே உங்க கூட வர்றேன் : இளையராஜா மகிழ்ச்சி |
மோகன்லாலின் மகன் பிரணவ் தனது முதல் படமான 'ஆதி' மூலம் தான் ஒரு ஆக்சன் ஹீரோவுக்கான அனைத்து லட்சணங்களும் கொண்டவர் என நிரூபித்துவிட்டார். ஆனால் அந்தப்படத்தில் மருந்துக்கு கூட காதல் காட்சி எதுவும் இடம்பெறவே இல்லை..
அதேபோல பிரணவின் இரண்டாவது படத்தை இயக்குகிறார் திலீப் நடித்த ராம்லீலா படத்தை இயக்கிய அருண்கோபி.. ராம்லீலா இவரது முதல் படம் என்றாலும், இதிலும் காதல் காட்சிகள் எதுவும் இல்லாமல், முழுக்க அரசியல் களத்திலேயே கதை நகர்த்தி வெற்றி பெற்றிருந்தார்.
தற்போது பிரணவும், அருண் கோபியும் தங்களது இரண்டாவது படத்தில் அருமையான காதல் கதைக்காக இணைந்துள்ளார்கள். ஒரு இயக்குனராக அருண்கோபியும், ஒரு ஹீரோவாக பிரணவ் மோகன்லாலும் தங்களை ரொமான்ட்டிக் ஏரியாவிலும் நிரூபிப்பார்கள் என நம்பலாம்.