ரகுல்பிரீத் சிங்கின் கவர்ச்சி அவதாரம் | சம்பள பிரச்சினையால் ரவிதேஜா படத்தில் நடிக்க மறுத்த காஜல்அகர்வால் | தமன்னாவின் யோகா பயிற்சி | மீடியாக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்த ரஜினி | நிகிஷா பட்டேலின் ஜீரோ சைஸ் போட்டோ | சீனாவில் திரையிடப்படும் நயன்தாரா படம் | சசிக்குமார் - எஸ்.ஆர்.பிரபாகரன் கூட்டணியில் சுந்தரபாண்டியன் 2 | இமாச்சல் தியான மையத்தில் ரஜினி | நித்யா மேனன் பாடிய ஜாஸ் பாடல்..! | கதையும் கேரக்டரும் எனக்கு முக்கியமாக படவில்லை : இஷா தல்வார் |
இதுவரை மசாலா படங்களில்தான் அதிகமாக நடித்து வந்துள்ளார் காஜல்அகர்வால். பெரும்பாலும் அவரை டூயட் பாடல்களுக்கு மட்டுமே இயக்குனர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இருப்பினும் அவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்று வருவதால் படத்திற்குப் படம் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே வருகிறார் காஜல்அகர்வால்.
மேலும், இதுவரை இளவட்ட நடிகர்களுடன் டூயட் பாடுவதற்கு தான் சம்பளத்தை அதிகப்படியாக கேட்டு வந்த காஜல், தற்போது தெலுங்கில் ரவிதேஜா நடிக்கும் அமர் அக்பர் ஆண்டனி படத்தில் நடிக்க முதலில் ஒத்துக்கொண்ட அவர், தான் கேட்ட சம்பளம் தரப்படவில்லை என்பதால் பின்னர் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார். அதனால் இப்போது காஜல்அகர்வால் வேடத்துக்கு அனு இம்மானுவேல் கமிட்டாகியிருக்கிறார்.
இதையடுத்து, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருந்தாலும் சம்பளத்தை விட்டுக்கொடுக்கலாம். ஆனால் இது வழக்கமான மசாலாப்படம். இந்த மாதிரி படங்களுக்காக சம்பளத்தை விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று அப்படக்குழுவிடம் வாக்குவாதம் செய்துள்ளார் காஜல்அகர்வால்.