ரகுல்பிரீத் சிங்கின் கவர்ச்சி அவதாரம் | சம்பள பிரச்சினையால் ரவிதேஜா படத்தில் நடிக்க மறுத்த காஜல்அகர்வால் | தமன்னாவின் யோகா பயிற்சி | மீடியாக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்த ரஜினி | நிகிஷா பட்டேலின் ஜீரோ சைஸ் போட்டோ | சீனாவில் திரையிடப்படும் நயன்தாரா படம் | சசிக்குமார் - எஸ்.ஆர்.பிரபாகரன் கூட்டணியில் சுந்தரபாண்டியன் 2 | இமாச்சல் தியான மையத்தில் ரஜினி | நித்யா மேனன் பாடிய ஜாஸ் பாடல்..! | கதையும் கேரக்டரும் எனக்கு முக்கியமாக படவில்லை : இஷா தல்வார் |
சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட துறைகள் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு இமயமலையில் உள்ள பாபாஜியை தரிசித்து விட்டு வந்து முடிவெடுப்பது ரஜினியின் நீண்டகால பாலிஸியாக இருந்து வருகிறது. அந்த வகையில், விரைவில் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பினை வெளியிடும் ரஜினி, முன்னதாக நேற்று இமயமலைக்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது அவரை விமான நிலையத்தில் மீடியாவினர் முற்றுகையிட்டு கேள்விகள் எழுப்பினர். அப்போது ரஜினி, தான் இமயமலைக்கு பாபாஜியை தரிசிக்க செல்வதாக சொன்னார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பெண்களுக்கு நிலவி வரும் பாதுகாப்பற்ற சூழல், சட்டம் ஒழுங்கு குறித்து அவரிடம் மீடியாக்கள் கேள்விகள் எழுப்பினர்.
ஆனால் அதற்கு ரஜினி பதில் சொல்ல விரும்பாமல் இப்போது எதுவும் வேண்டாம். நான் இமய மலைக்கு சென்று கொண்டிருக்கிறேன். அப்புறம் பார்க்கலாம். வணக்கம் என்று சொல்லிவிட்டு வேகமாக புறப்பட்டுச்சென்று விட்டார்.