ரகுல்பிரீத் சிங்கின் கவர்ச்சி அவதாரம் | சம்பள பிரச்சினையால் ரவிதேஜா படத்தில் நடிக்க மறுத்த காஜல்அகர்வால் | தமன்னாவின் யோகா பயிற்சி | மீடியாக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்த ரஜினி | நிகிஷா பட்டேலின் ஜீரோ சைஸ் போட்டோ | சீனாவில் திரையிடப்படும் நயன்தாரா படம் | சசிக்குமார் - எஸ்.ஆர்.பிரபாகரன் கூட்டணியில் சுந்தரபாண்டியன் 2 | இமாச்சல் தியான மையத்தில் ரஜினி | நித்யா மேனன் பாடிய ஜாஸ் பாடல்..! | கதையும் கேரக்டரும் எனக்கு முக்கியமாக படவில்லை : இஷா தல்வார் |
இந்தியில் உருவான டங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார்ஸ், பஜரங்கி பைஜான் ஆகிய படங்கள் சீனாவிலும் வெளியிடப்பட்டது. அப்போது இந்த படங்களுக்கு சீன ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்தனர். இதனால் தற்போது இந்திய மொழிகளில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும் படங்கள் சீன ரசிகர்களையும் கருத்தில் கொண்டு உருவாகத் தொடங்கியிருக்கின்றன.
அந்த வகையில், தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தையும் சீனாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட இப்போதே திட்டமிட்டு விட்டனர். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் நடிப்பதால் இந்தி படங்களுக்கு கிடைப்பது போன்ற வரவேற்பு சைரா நரசிம்ம ரெட்டிக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
மேலும், இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். ஆக, முதன்முறையாக நயன்தாரா நடிக்கும் ஒரு படம் சீனாவில் திரையிடப்பட உள்ளது.