நித்யா மேனன் பாடிய ஜாஸ் பாடல்..! | கதையும் கேரக்டரும் எனக்கு முக்கியமாக படவில்லை : இஷா தல்வார் | 34 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மை.டி.கு., இயக்குநர் | மீண்டும் பாலிவுட்டுக்கு செல்லும் பிரபுதேவா | ஸ்டிரைக்குக்கு ஓகே சொன்ன ரஜினி? | இயக்குநர் பாலாவின் வேகம் தொடருமா? | சம்பளத்தை உயர்த்திய ரகுல் ப்ரீத்சிங் | 'பீப்' பாடலை வெளியிட்டது அட்மின் : டி ராஜேந்தர் | எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஜோடியின், 29வது படம் | குண்டாக மாறும் அஞ்சலி |
நித்யா மேனன் தற்போது மலையாளத்தில் 'ப்ராண' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தை பிரபல இயக்குனர் வி.கே.பிரகாஷ் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உட்பட நான்கு மொழிகளில் இந்தப்படம் தயாராகியுள்ளது. நான்கு மொழிகளிலும் ஒரே கதாநாயகி ஒரே நேரத்தில் நடித்திருக்கிறார் நித்யா மேனன்.. அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் ஒரு ஜாஸ் பாடலையும் பாடியுள்ளார் நித்யா மேனன்..
பிரபல இசையமைப்பாளர் லூயிஸ் பேங்க் இந்தப்படளுக்கு இசையமைத்துள்ளார். தனது குரல் ஜாஸ் பாடல்களுக்கு செட்டாகும் என்பதால், இந்தப்படத்தில் தான் பாடியதாக கூறியுள்ளார் நித்யா மேனன்...
கடந்த 2௦1௦லிருந்தே நித்யா மேனன் பாடி வருகிறார் என்பதும் இதுவரை கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.