நித்யா மேனன் பாடிய ஜாஸ் பாடல்..! | கதையும் கேரக்டரும் எனக்கு முக்கியமாக படவில்லை : இஷா தல்வார் | 34 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மை.டி.கு., இயக்குநர் | மீண்டும் பாலிவுட்டுக்கு செல்லும் பிரபுதேவா | ஸ்டிரைக்குக்கு ஓகே சொன்ன ரஜினி? | இயக்குநர் பாலாவின் வேகம் தொடருமா? | சம்பளத்தை உயர்த்திய ரகுல் ப்ரீத்சிங் | 'பீப்' பாடலை வெளியிட்டது அட்மின் : டி ராஜேந்தர் | எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஜோடியின், 29வது படம் | குண்டாக மாறும் அஞ்சலி |
இந்திய சினிமாவிலேயே 2018 ஆம் வருடத்தின் மிகப்பெரிய படம் 2.0. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணியில் தொய்வு ஏற்பட்டதால் இந்த வருடத்தின் பின்பாதியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
தயாரிப்பு தரப்பிலிருந்து 2.0 படத்தின் வெளியீடு பற்றியோ, படம் தாமதமாவது பற்றியோ அதிகாரப்பூர்வமாக எந்தவித செய்தியும் இதுவரை வரவில்லை. ஆனாலும் ரஜினி நடித்த காலா திரைப்படம் ஏப்ரல் 27 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
'கபாலி'யை தொடர்ந்து ரஜினிகாந்தும், பா.ரஞ்சித்தும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் என்பதால் 'காலா'வை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது நடைபெறும் வேலை நிறுத்தம் காரணமாக இந்த படம் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த விஷயத்தை தயாரிப்பாளர்கள் சங்கம், ரஜினியின் கவனத்துக்குக் கொண்டு போய் உள்ளது. அதற்கு ரஜினி சம்மதம் சொன்ன பிறகே வேலைநிறுத்தத்தை நீட்டிக்கும் முடிவுக்கு வந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.