எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஜோடியின், 29வது படம் | குண்டாக மாறும் அஞ்சலி | இந்தி படங்களை ஓரங்கட்டிய சன்னி லியோன்! | ரஜினியின் அரசியல் படம் | விஜய் ரசிகராக ஜி.வி.பிரகாஷ் | யு டியூபைக் கலக்கும் 'காலா' - 'டிரோல்' டீசர்கள் | ஒதுக்கப்பட்ட பச்சை நிறுவனம் | இயக்கத்தில் அக்சய்க்கு உதவுவேன் : கீர்த்தனா | பாலாவின் வர்மா முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது | சாஹோவில் பிரபாஸ் என்ன வேடத்தில் நடிக்கிறார் தெரியுமா? |
பாகுபலி-2வைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் புதிய படம் சாஹோ. சுஜீத் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படம் ரூ.150 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. சண்டை காட்சிகளுக்கு மட்டுமே பல கோடி செய்கிறார்கள். ஹாலிவுட் பைட் மாஸ்ட் கென்னி பேட்ஸ் படமாக்குகிறார்.
இதுவரை இந்த படத்தில் பாகுபலியில் இருந்து மாறுபட்டு ஸ்டைலிசான தோற்றத்தில் பிரபாஸ் நடித்து வருவதாக மட்டுமே செய்திகள் வெளியாகி வந்தன. இப்போது அவர் அந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இந்த படத்தில் சர்வதேச குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் போலீஸ் தகவல் தெரிவிப்பாளராக பிரபாஸ் நடிக்கிறாராம். ஆனால் இது க்ளைமாக்ஸில் தான் தெரியுமாம். அதற்கு முன்பு வரை அவரது வேடம் சர்வதேச திருடனாக சித்தரிக்கப்படுகிறதாம். திருடனாக நடித்து குற்றவாளிகளை அவர் எப்படி கூண்டோடு பிடித்துக் கொடுக்கிறார் என்பதுதான் இந்த சாஹோ படத்தின் கதையாம்.