எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஜோடியின், 29வது படம் | குண்டாக மாறும் அஞ்சலி | இந்தி படங்களை ஓரங்கட்டிய சன்னி லியோன்! | ரஜினியின் அரசியல் படம் | விஜய் ரசிகராக ஜி.வி.பிரகாஷ் | யு டியூபைக் கலக்கும் 'காலா' - 'டிரோல்' டீசர்கள் | ஒதுக்கப்பட்ட பச்சை நிறுவனம் | இயக்கத்தில் அக்சய்க்கு உதவுவேன் : கீர்த்தனா | பாலாவின் வர்மா முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது | சாஹோவில் பிரபாஸ் என்ன வேடத்தில் நடிக்கிறார் தெரியுமா? |
பிரபலமான நட்சத்திரங்களின் டீசர்கள், டிரைலர்கள் வெளியான உடனே அந்த டீசர்களில் மற்ற நடிகர்கள் இடம் பெற்றிருந்தால் எப்படி இருந்திருக்கும் என பல 'டிரோல்' டீசர்கள் வெளிவருவது வழக்கமாகிவிட்டன. வழக்கமாக படங்களை வைத்து வரும் மீம்ஸ்களுக்குப் போட்டியாக இப்படி 'டிரோல்' டீசர்களும் ரசிகர்களைக் கவர ஆரம்பித்துள்ளன.
அந்த விதத்தில் பத்து நாட்களுக்கு முன்பு வெளியான 'காலா' டீசரின் பல டிரோல் வெர்ஷன்கள் வெளியிடப்பட்டுள்ளன. அஜித், விஜய், வடிவேலு, தோனி என பலரை வைத்து அப்படிப்பட்ட டீசர்களை உருவாக்கியிருக்கிறார்கள். இவற்றில் மற்ற டீசர்களை விட வடிவேலுவின் வெர்ஷனுக்குத்தான் அதிகப்படியான வரவேற்பு இருக்கிறது. தேடித் தேடிப் பிடித்து வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளை அதில் இணைத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
பல கோடி செலவு செய்து எடுக்கப்படும் சில படங்களின் உண்மையான டீசர்களின் பார்வைகள் எண்ணிக்கையை விட இப்படிப்பட்ட டிரோல் டீசர்களின் பார்வைகள் அதிகமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
'காலா' டீசரின் மொத்த பார்வைகளின் எண்ணிக்கையில் இப்படிப்பட்ட டிரோல் டீசர்கள், விமர்சன வீடியோக்கள் என பலவற்றையும் சேர்த்தால் 'காலா' சம்பந்தப்பட்ட வீடியோக்களின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டும்.
போகிற போக்கில் ஆங்கில வீடியோக்களையும் மிஞ்சும் அளவிற்கு தமிழ் வீடியோக்கள் உலக அளவில் முக்கியமான இடத்தைப் பிடித்துவிடும் போலிருக்கிறது.