மார்ச் 16 முதல் சினிமா படப்பிடிப்பு அனைத்தும் ரத்து | மக்களை மறந்து கடந்து போக மாட்டேன் : சுகன்யா | தெலுங்கிலும் மாறாத தரமணி | உதயநிதிக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர், இந்துஜா | ஹாலிவுட் ரீமேக் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் | ஸ்ரீதேவி பற்றி படம் தயாரிக்க போனி கபூர் திட்டம் | மதுரையில் துவங்கியது நாடோடிகள் 2 | தன் பட ஷூட்டிங்கை எட்டிக்கூட பார்க்காத சிவகார்த்திகேயன் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் பிருத்விராஜ் | மம்முட்டியின் 'ஒரு குட்டநாடன் பிளாக்' துவங்கியது |
ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'தரமணி'. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் இருந்த தரமணி படம் மிகப்பெரிய போராட்டத்துக்குப் பிறகு திரைக்கு வந்தது. மீடியாக்களில் நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் தரமணி படத்துக்கு வெற்றி கிடைத்தது.
இந்நிலையில் 'தரமணி' படம் மிக விரைவில் தெலுங்கிலும் வெளியாகவிருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி தெலுங்கு சினிமா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப்படத்தை 'தரமணி' என்ற பெயரிலேயே வெளியிட திட்டமிட்டுள்ளார் இந்த படத்தை வாங்கியிருக்கும் வெங்கடேஷ். தெலுங்கு பதிப்பிலும் கதை சென்னையில் நடப்பது போலவே சித்தரிக்கப்பட்டுள்ளது.