பழைய படங்கள் மீண்டும் திரையில்...! | 'வெட்டாட்டம்' நாவல் தான் 'நோட்டா' கதையா ? | தியேட்டர்காரர்களின் 'ஈகோ'வால் போட்டி போராட்டம் | தெலுங்கில் வெளியாகும் நயன்தாராவின் அறம் | காலா படம் முழுக்க காட்டன் உடையில் ரஜினி | அஜித்தின் விசுவாசத்தில் இணைந்த ரோபோ சங்கர் | மீண்டும் ஜோடி சேரும் நாகசைதன்யா - சமந்தா | தமிழுக்கு வரும் மகேஷ்பாபுவின் முதல் கவ்பாய் திரைப்படம்! | கேணி படத்திற்கு கேரள அரசு விருது | மீண்டும் படப்பிடிப்பில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி |
திரையுலகத்தில் பணம் போடும் முதலீட்டாளர்கள் தான் படத்தின் தயாரிப்பாளர்கள். பலரும் வட்டிக்கு பணம் வாங்கித்தான் படங்களைத் தயாரிக்கிறார்கள். ஒரு படத்தை எடுத்து வெளியிட்டு முடிப்பதற்குள் பல பிரச்சினைகளை ஒரு தயாரிப்பாளர் சந்திக்க வேண்டியிருக்கிறது. வியாபாரம், தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம், பைரசி, விளம்பரம், விமர்சனம், சமூக வலைத்தள கருத்துக்கள் இப்படி பலவற்றைத் தாண்டித்தான் ஒரு படத்தின் வெற்றியும், வசூலும் நிர்ணயிக்கப்படுகின்றன.
சினிமா என்பது டிஜிட்டல் மயமான பின் வந்த பிரச்சினை தான் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுடனான பிரச்சினை. அவர்கள் வாங்கும் அதிகப்படியான கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தினர் போராடி வருகிறார்கள். அந்தப் போராட்டத்தின் முக்கிய பகுதியாக புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளார்கள்.
இதனால், பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு தியேட்டர்களை மூடும் சூழல் உருவாகியுள்ளது. தயாரிப்பாளர்களின் இந்த பேராட்டத்தால் தியேட்டர்காரர்களுக்கும் சில பிரச்சினைகள் தீரும். ஆனால், அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு தர மறுக்கிறார்கள். அதற்குக் காரணம் 'ஈகோ' தான்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சில முக்கிய தியேட்டர் அதிபர்கள் திரையுலகத்தை அவர்கள் கையில் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்களாம். அதற்கு முக்கிய பைனான்சியர் ஒருவரும் பலமாக ஆதரவு தருகிறாராம். அதனால் தான் டிஜிட்டல் நிறுவனங்களும் இறங்கி வர மறுக்கிறார்கள் என்கிறார்கள்.
இதனிடையே, தியேட்டர் அதிபர்கள் நேற்று அறிவித்த போராட்டத்திற்கும் ஈகோ தான் காரணம். புதிய படங்கள் இல்லாததால் தியேட்டர்களை மூடுகிறோம் என்று சொன்னால் நன்றாக இருக்காது என்பதற்காக தமிழக அரசிடம் சில கோரிக்கைகளை வைத்து ஸ்டிரைக் அறிவித்துள்ளார்கள்.
ஏற்கெனவே, பல முறை பேசிய பிறகே தமிழக அரசு கேளிக்கை வரி மற்ற கட்டணங்களை நிர்ணயித்தது. தியேட்டர்காரர்களின் கோரிக்கை மீண்டும் தமிழக அரசு கேட்டு முடிவெடுக்கப் போவதில்லை.
திரையுலகத்தினரின் இந்த போராட்டம் மக்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. தற்போது முழு ஆண்டுத் தேர்வுகள் நடந்து வருவதால் புதிய படங்கள் வராதது நல்லது தான் என பலரும் நினைக்கிறார்கள். மாணவர்களின் கவனம் சிதறாமல் அவர்களும் படிப்பில் கவனம் செலுத்த இது நல்ல வாய்ப்பாக இருக்கிறது.
இனிமேல், வருடாவருடம் தேர்வு நடைபெறும் மாதங்களான மார்ச், ஏப்ரல் மாதங்களில் புதிய படங்கள் வராமல் இருப்பதே நல்லது என்றும் பலர் கூறுகிறார்கள்.