பழைய படங்கள் மீண்டும் திரையில்...! | 'வெட்டாட்டம்' நாவல் தான் 'நோட்டா' கதையா ? | தியேட்டர்காரர்களின் 'ஈகோ'வால் போட்டி போராட்டம் | தெலுங்கில் வெளியாகும் நயன்தாராவின் அறம் | காலா படம் முழுக்க காட்டன் உடையில் ரஜினி | அஜித்தின் விசுவாசத்தில் இணைந்த ரோபோ சங்கர் | மீண்டும் ஜோடி சேரும் நாகசைதன்யா - சமந்தா | தமிழுக்கு வரும் மகேஷ்பாபுவின் முதல் கவ்பாய் திரைப்படம்! | கேணி படத்திற்கு கேரள அரசு விருது | மீண்டும் படப்பிடிப்பில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி |
நடிகை கவுதமி, உலக மகளிர் தினத்தையொட்டி மகள் என்ற வீடியோ ஆல்பத்தை நேற்று வெளியிட்டார். இதனை அவரே தயாரித்து, அதில் நடித்தும் இருக்கிறார். பெண் குழந்தை குறித்த பாடலை அறிவுமதி எழுதியுள்ளார், தேவி நெய்தியார் பாடியுள்ளார். கார்த்திக் கோடகண்டலா இயக்கி உள்ளார். இந்த ஆல்பத்தை வெளியிட்டு கவுதமி பேசியதாவது:
அனைவருக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துகள். இந்த அருமையான நாளில், அனைத்து தாய்மார்களுக்குமான காணிக்கையாக “மகளே” என்கிற இந்த வீடியோ பாடலை வெளியிடுவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. பெண்களுக்கான தேவைகள் குறித்து கடந்த 2 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறேன். தனியொரு மனிதனால் இங்கு எதுவுமே சாத்தியமில்லை, எனவே தான் எங்கள் தி லைப் அகைன் நிறுவனத்தில் பலரும் கைகோர்த்து ஒன்றாக நிற்கிறோம். உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பையும், வாழ்த்துகளையும், ஆசியையும் எதிர்பார்க்கிறோம். இன்றிலிருந்து பெண்கள் முன்னேற்றத்திற்காக எங்கள் நிறுவனம் தீவிமாக செயல்படும் என்றார் கவுதமி.