மக்களை மறந்து கடந்து போக மாட்டேன் : சுகன்யா | தெலுங்கிலும் மாறாத தரமணி | உதயநிதிக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர், இந்துஜா | ஹாலிவுட் ரீமேக் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் | ஸ்ரீதேவி பற்றி படம் தயாரிக்க போனி கபூர் திட்டம் | மதுரையில் துவங்கியது நாடோடிகள் 2 | தன் பட ஷூட்டிங்கை எட்டிக்கூட பார்க்காத சிவகார்த்திகேயன் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் பிருத்விராஜ் | மம்முட்டியின் 'ஒரு குட்டநாடன் பிளாக்' துவங்கியது | பிரபாஸுக்காக இந்தி வாய்ப்பை நிராகரித்த அனுஷ்கா |
இந்தியத் திரையுலகத்தில் முடிசூடா ராணியாக விளங்கியவர் நடிகை ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தென்னிந்தியத் திரையுலகத்தை ஆட்சி செய்து பின், ஹிந்தித் திரையுலகத்திலும் தனி ராணியாக விளங்கினார். அவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்தது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சுமார் 50 ஆண்டுகள் திரையுலகத்தில் தனக்கென தனி இடத்தை ஏற்படுத்தியவர். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். திரையுலகத்தில் அவரும் பல தடங்கல்களைக் கடந்துதான் நம்பர் 1 இடத்திற்கு வந்தார்.
ஸ்ரீதேவி மறைந்ததுமே அவரது வாழ்க்கை வரலாற்றை யாராவது படமாகத் தயாரிக்கலாம் என்ற பேச்சு எழுந்தது. ஸ்ரீதேவியின் தீவிர ரசிகரான இயக்குனர் ராம்கோபால் வர்மா, ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க யாருக்குமே தகுதியில்லை என்று சொன்னார்.
இருந்தாலும், ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் ஸ்ரீதேவி பற்றி படம் ஒன்றைத் தயாரிக்கும் திட்டத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது மேற்கொண்டு நடக்குமா என்பது விரைவில் தெரிய வரலாம்.