கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்! வரலட்சுமி சரத்குமார் | சாய் பல்லவி அதிரடி: ஹீரோக்கள் கலக்கம் | குறும்படங்களின் வெற்றிக்கு இளம்பெண்களே காரணம்! | விடுமுறையை கொண்டாட வெளிநாடு பயணம்! | திருச்சி உஷா குடும்பத்திற்கு கமல் ரூ.10 லட்சம் நிதி | ரஜினி, கமலால் வெற்றிடத்தை நிரப்ப முடியாது : கவுதமி | நோட்டா உடன் களமிறங்கும் அர்ஜூன் ரெட்டி ஹீரோ | எம்ஜிஆர்., பாடல் அமலாபால் பட தலைப்பானது | 2017ம் ஆண்டு கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகை பார்வதி | மணிரத்னம் பட ஷூட்டிங்கில் இணைந்தார் அப்பாணி சரத் |
பிரேமம் புகழ் சாய் பல்லவியை, தெலுங்கு நடிகர்கள், சற்று மிரட்சியுடன் தான் பார்க்கின்றனர். சாய் பல்லவி, அடுத்ததாக, கரு என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார். இந்த படம், தெலுங்கில், கனம் என்ற பெயரில், ஒரே நேரத்தில் தயாராகிறது. இதில், ஹீரோவாக இளம் தெலுங்கு நடிகர், நாக சவுரியா நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பின்போது, சாய் பல்லவி, தனக்கு இடையூறு செய்து, மன உளைச்சலை ஏற்படுத்தியதாக, கதறி அழாத குறையாக புகார் கூறியிருந்தார், நாக சவுரியா. சாய் பல்லவியோ, 'எனக்கும், நாக சவுரியாவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. என்னைப் பற்றி, அவர், ஏன் இப்படி கூறினார் எனத் தெரியவில்லை' என, 'டேக் இட் ஈசி'யாக கூறியிருந்தார்.
ஆனாலும், சாய் பல்லவி மீதுள்ள கோபம், நாக சவுரியாவுக்கு இன்னும் தீரவில்லை
போலிருக்கிறது. சமீபத்தில், கனம் படத்தின் விளம்பர நிகழ்ச்சி, ஐதராபாதில் நடந்தது. இதில், படத்தின் ஹீரோவான, நாக சவுரியா பங்கேற்கவில்லை. இதைக் கேள்விப்பட்ட தெலுங்கு ஹீரோக்கள், 'அந்த பொண்ணு, அந்த அளவுக்கா, நாக சவுரியாவுக்கு மன உளைச்சலை
ஏற்படுத்தியது' என, சாய் பல்லவியை பற்றி, ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர்.