மக்களை மறந்து கடந்து போக மாட்டேன் : சுகன்யா | தெலுங்கிலும் மாறாத தரமணி | உதயநிதிக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர், இந்துஜா | ஹாலிவுட் ரீமேக் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் | ஸ்ரீதேவி பற்றி படம் தயாரிக்க போனி கபூர் திட்டம் | மதுரையில் துவங்கியது நாடோடிகள் 2 | தன் பட ஷூட்டிங்கை எட்டிக்கூட பார்க்காத சிவகார்த்திகேயன் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் பிருத்விராஜ் | மம்முட்டியின் 'ஒரு குட்டநாடன் பிளாக்' துவங்கியது | பிரபாஸுக்காக இந்தி வாய்ப்பை நிராகரித்த அனுஷ்கா |
2017-ஆம் வருடத்திற்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகர் விருது இப்போதுள்ள முன்னணி ஜூனியர் அல்லது சீனியர் நடிகர்கள் யாருக்கும் கிடைக்காமல் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான இந்திரன்ஸ் என்பவருக்கு கிடைத்துள்ளது.
விருது கமிட்டியில் ஒரு உறுப்பினரான இயக்குனர் டிவி சந்திரன் இது பற்றி குறிப்பிடும்போது, சிறந்த நடிகராக இந்திரன்ஸை தேர்வு செய்வதில் எங்களுக்கு எந்த குழப்பமும் இருக்கவில்லை. ஆனால் சிறந்த நடிகையாக பார்வதியை தேர்வு செய்வதற்குத்தான் எங்களுக்கு அதிக நேரம் பிடித்தது என்கிறார்.
காரணம் சிறந்த படமாக விருது பெற்ற 'ஒட்டமுறி வெளிச்சம்' படத்தில் நாயகியாக நடித்த விநீதா கோஷி என்பவரும் பார்வதியின் நடிப்புக்கு சவால் விடும் அவளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாராம்.
ஆனாலும் கதையின் தன்மை, அதில் தங்களது கேரக்டரை வெளிப்படுத்திய விதம் என பல அம்சங்களை அலசியபின்பே பார்வதிக்கு சிறந்த நடிகைக்கான விருதை அறிவித்தார்களாம். இருந்தாலும் விநீதா கோஷிக்கும் சிறந்த நடிகைக்கான ஸ்பெஷல் ஜூரி விருதை வழங்கி கௌரவித்துள்ளார்கள்.