பழைய படங்கள் மீண்டும் திரையில்...! | 'வெட்டாட்டம்' நாவல் தான் 'நோட்டா' கதையா ? | தியேட்டர்காரர்களின் 'ஈகோ'வால் போட்டி போராட்டம் | தெலுங்கில் வெளியாகும் நயன்தாராவின் அறம் | காலா படம் முழுக்க காட்டன் உடையில் ரஜினி | அஜித்தின் விசுவாசத்தில் இணைந்த ரோபோ சங்கர் | மீண்டும் ஜோடி சேரும் நாகசைதன்யா - சமந்தா | தமிழுக்கு வரும் மகேஷ்பாபுவின் முதல் கவ்பாய் திரைப்படம்! | கேணி படத்திற்கு கேரள அரசு விருது | மீண்டும் படப்பிடிப்பில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி |
தமிழ் சினிமாவின் நிலையும், தியேட்டர்கள் நிலையும் இப்படி ஆகும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு ஊரிலும் புத்தம் புதிய படங்களைத் திரையிட தனி தியேட்டர்கள், கொஞ்சம் பழைய படங்களைத் திரையிட சில தியேட்டர்கள், அதற்கும் பழைய படங்களைத் திரையிட சில தியேட்டர்கள் என தனித் தனியாக இருக்கும்.
இப்போது அனைத்து ஊர்களிலும் பழைய படங்களை வெளியிடும் நிலை வந்துவிட்டது. கடந்த ஆண்டில் வெளிவந்து சிலபல காரணங்களால் ரசிகர்களால் கவனிக்கப்படாமல் போன படங்கள், நன்றாக ஓடிய படங்கள் என சில படங்களை மீண்டும் இன்று திரையிட்டுள்ளார்கள்.
புதிய படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளதுதான் இதற்குக் காரணம். அதனால் பல பழைய படங்கள் இன்று வெளியாகியுள்ளன. “மெர்சல், மேயாத மான், கருப்பன், தரமணி, விக்ரம் வேதா, சிவலிங்கா, தெறி, வேதாளம், பாகுபலி, யாமிருக்க பயமே, பாட்ஷா, நினைத்ததை முடிப்பவன்,” ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த வாரம் முதல் தியேட்டர்காரர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதால் ஒரு வாரத்திற்கு இந்தப் பழைய படங்களைத்தான் ரசிகர்கள் பார்த்தாக வேண்டும்.