மக்களை மறந்து கடந்து போக மாட்டேன் : சுகன்யா | தெலுங்கிலும் மாறாத தரமணி | உதயநிதிக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர், இந்துஜா | ஹாலிவுட் ரீமேக் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் | ஸ்ரீதேவி பற்றி படம் தயாரிக்க போனி கபூர் திட்டம் | மதுரையில் துவங்கியது நாடோடிகள் 2 | தன் பட ஷூட்டிங்கை எட்டிக்கூட பார்க்காத சிவகார்த்திகேயன் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் பிருத்விராஜ் | மம்முட்டியின் 'ஒரு குட்டநாடன் பிளாக்' துவங்கியது | பிரபாஸுக்காக இந்தி வாய்ப்பை நிராகரித்த அனுஷ்கா |
நடிகர் சிவகார்த்திகேயன் சொந்தமாக தனது பெயரிலேயே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, முதல்படமாக தனது நண்பரும், நடிகருமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தை தயாரித்து வருகிறார்.
கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் பெண்ணை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. சத்யராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு உள்ளிட்ட சில தெரிந்த முகங்கள் மட்டுமே நடிக்கின்றனர் புதுமுகம் ஹீரோ தர்ஷன், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட 70 சதவீதம் பேர் புதுமுகங்கள் தான். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.
திருச்சியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து இதுநாள் வரை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்ததது இல்லையாம் சிவகார்த்திகேயன். தன் நண்பர் அருண்ராஜா காமராஜ் மீதுள்ள நம்பிக்கை காரணமாக ஒட்டுமொத்த பொறுப்பையும் அவரை நம்பி வழங்கிவிட்டாராம். இதுநாள் வரை படத்திற்கான முதலீட்டை மட்டுமே சிவகார்த்திகேயன் கொடுத்து வருகிறாராம்.
இது கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதை என்றாலும் அருவி, அறம் படங்களின் வரிசையில் பெண்மையை பெருமைப்படுத்தும் விதமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர்.
தொடர்ந்து படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. செப்டம்பர் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.