நோட்டா உடன் களமிறங்கும் அர்ஜூன் ரெட்டி ஹீரோ | எம்ஜிஆர்., பாடல் அமலாபால் பட தலைப்பானது | 2017ம் ஆண்டு கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகை பார்வதி | மணிரத்னம் பட ஷூட்டிங்கில் இணைந்தார் அப்பாணி சரத் | தீவண்டி பர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட துல்கர் சல்மான் | பஹத் பாசிலை இயக்குநர் வில்லன் இயக்குநர் | மார்ச் 16 முதல் தியேட்டர்களை மூட முடிவு | விக்னேஷ் சிவன் மகளிர் தின வாழ்த்து | வட சென்னை, சமந்தா இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ? | சினிமாவில் களமிறங்கும் இரண்டு வாரிசுகள் |
13 ஆண்டுகளுக்கு முன் மம்முட்டி நடித்த ராஜமாணிக்கம் படத்தில் அவருக்கு திருவனந்தபுரம் பாஷை சொல்லித்தருவதற்காக ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக உள்ளே நுழைந்தவர் தான் மலையாள நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சாராமுடு.
இத்தனை வருடங்களில் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருது, மம்முட்டி, மோகன்லால், திலீப்புடன் இணைந்து பல படங்களில் நடித்தது என நிறைய சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆகிவிட்டார் சுராஜ் வெஞ்சாரமூடு.
இதோ, இன்று மம்முட்டி நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கு, கதாசிரியர் ஷியாம் புஷ்கரனோடு இணைந்து கதை எழுதும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். இந்தப்படத்தை 'மகேஷிண்டே பிரதிகாரம்' இயக்குனர் திலீஷ் போத்தன் இயக்குகிறார்.
ராம் இயக்கியுள்ள 'பேரன்பு' படத்தில் நாயகனாக நடித்துள்ள மம்முட்டி, இதில் முக்கியமான கேரக்டரில் நடிக்க தன்னுடன் சுராஜ் வெஞ்சாரமூடுவையும் தமிழுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.