விக்னேஷ் சிவன் மகளிர் தின வாழ்த்து | வட சென்னை, சமந்தா இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ? | சினிமாவில் களமிறங்கும் இரண்டு வாரிசுகள் | சூப்பர் ஸ்டார் இல்லை... ரஜினியிடம் ஏற்பட்ட மாற்றம் | அருவி எடிட்டருக்கு கிடைத்த மலையாளப்படம் | ராணா படத்தில் 'அவதார்' பட டெக்னீஷியன் | பரபரப்பை ஏற்படுத்தாத பிப்ரவரி மாதம் : பிப்ரவரி மாதப் படங்கள் ஓர் பார்வை | தென்னிந்தியாவில் தனுஷ் நம்பர் 1 | என் தந்தை மேக்கப் போட்டாலே முதலமைச்சர் ஆகிடுவாங்க : பி.வாசு | ஷகீலா வாழ்க்கை படத்தில் ரிச்சா சத்தா |
எல்லா வாரிசு நடிகர்களுக்கும் அவர்கள் அறிமுகமாகும் படம் பெரிய அளவில் கைகொடுக்கும் என சொல்லமுடியாது. மம்முட்டி, மோகன்லால் மகன்கள் முதல் படத்திலேயே டாப் கியரில் எகிற, மலையாள ஆக்சன் கிங் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷோ தடுமாறிக்கொண்டு இருக்கிறார்.
அவர் அறிமுகமான முதுகாவ் படம் ஆவரேஜ் என்கிற அளவில் நின்றுவிட, அதை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் வெளியான மம்முட்டியின் மாஸ்டர்பீஸ் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தது அதிர்ச்சியை தந்தது.. இந்தநிலையில் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டில் 'பாகமதி' ஹீரோ உன்னிமுகுந்தனுடன் இணைந்து 'இறா' என்கிற படத்தில் ஒரு ஹீரோவாக நடித்துள்ளார் கோகுல் சுரேஷ்..
அறிமுக இயக்குனர் சைஜூ என்பவர் இந்தப்படத்தை இயக்கியிருந்தாலும், புலி முருகன் இயக்குனர் வைசாக் மற்றும் அதன் கதாசிரியர் உதயகிருஷ்ணா இருவரும் சேர்ந்து இந்தப்படத்தை தயாரித்திருப்பதால் நிச்சயம் படத்தில் விஷயம் இருக்கும் என்றும் அது கோகுல் சுரேஷுக்கு கைகொடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
வரும் மார்ச்-16 ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது.