ராணா படத்தில் 'அவதார்' பட டெக்னீஷியன் | பரபரப்பை ஏற்படுத்தாத பிப்ரவரி மாதம் : பிப்ரவரி மாதப் படங்கள் ஓர் பார்வை | தென்னிந்தியாவில் தனுஷ் நம்பர் 1 | என் தந்தை மேக்கப் போட்டாலே முதலமைச்சர் ஆகிடுவாங்க : பி.வாசு | ஷகீலா வாழ்க்கை படத்தில் ரிச்சா சத்தா | ரஜினிக்கு ஜோடியாகிறார் நயன்தாரா? | கரேன்ஜிட் டு சன்னி - சன்னி லியோன் பற்றிய ஆவணப்படம்! | அமெரிக்காவில் போட்டோ சூட் நடத்தும் ராஜமவுலி | வீட்டு சாவி கொடுக்கும் பெண்களிடம் நாட்டை ஒப்படைக்கலாம் : கமல் | மம்முட்டிக்கு கதை எழுதும் காமெடி நடிகர் |
ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் திரிஷா உள்ளிட்ட சில முன்னணி நடிகைகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் நயன்தாராவுக்கு தமிழில் சில படங்களில் நடித்தபோதே ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு சிவாஜி(ஒரு பாடல்), குசேலன் என மூன்று படங்களில் நடித்தார்.
இந்தநிலையில், தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் புதிய படத்தில், நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அப்படி ஒருவேளை இந்த படத்தில் மீண்டும் ரஜினிக்கு நயன்தாரா ஜோடியாகி விட்டால், அஜித்துடன் நான்காவது முறையாக இணைவது போன்று ரஜினியுடனும் நான்கு படங்களில் நடித்த அதிர்ஷ்டசாலி நடிகையாகி விடுவார் நயன்தாரா.