சென்னை : ''ஜெயலலிதாவின் கால்கள் துண்டிக்கப்பட்டிருந்தால், இறுதி சடங்குகள் செய்யும் போது, எப்படி என்னால், அவரின் கால் கட்டை விரல்களை சேர்த்து கட்டியிருக்க முடியும்,'' என, ஜெ., கார் ஓட்டுனர், அய்யப்பன் கூறினார்.
ஜெ., மரணம் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன் விசாரித்து வருகிறது. இதுவரை, 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
ஜெ., மறுப்பு
ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுனராக இருந்த அய்யப்பனிடம், பிப்., 23ல் விசாரணை நடந்தது. அவர், மீண்டும் ஆஜராக, நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, விசாரணை கமிஷனில், நேற்று காலை, 10:15 மணிக்கு, அய்யப்பன் ஆஜரானர். அவரிடம், 1:15 வரை விசாரணை நடந்தது.
விசாரணை முடிந்து வெளியே வந்த, அய்யப்பன் கூறியதாவது:கடந்த, 2016 செப்., 21ல், அரசு பஸ்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில், ஜெ., பங்கேற்றார். அப்போதே, அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால், நான்கு பஸ்களை மட்டுமே கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதையடுத்து, மெட்ரோ ரயில் துவக்க விழாவில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும், தலைமை செயலகம் செல்ல வேண்டும். ஆனால், உடல்நிலை சரியில்லை. சீக்கிரம் கார்டன் செல்லும்படி, ஜெ., என்னிடம் அறிவுறுத்தினார்.
மறுநாள், 22ம் தேதியும், அவருக்கு நிகழ்ச்சிகள் இருந்தன. ஆனால், நிகழ்ச்சிகளை ஒத்திவைத்தார். தொடர்ந்து, அவருக்கு உடல்நிலை மோசமானது.
டாக்டர் சிவகுமாரும், சசிகலாவும், ஜெ.,வை மருத்துவமனைக்கு அழைத்தனர். ஆனால், 'டாக்டர்கள் வேண்டுமென்றால், இங்கு வந்து என்னை பார்க்கட்டும்; நான் மருத்துவமனை வரமாட்டேன்' என, ஜெ., மறுத்து விட்டார்.
மயக்கம்
பின், மாலை, 6:00 மணிக்கு, என் பணி முடிந்து, வீட்டிற்கு சென்று விட்டேன். இதையடுத்து, மயக்கநிலை ஏற்பட்டு, மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்டுள்ளதாக, இரவு, 10:10க்கு எனக்கு தகவல் கிடைத்தது.
பின், போயஸ் கார்டனில் இருந்து, ஜெயலலிதாவுக்கு தேவையான, அவரின் உடைமைகளை, மருத்துவமனைக்கு எடுத்து சென்றேன். அப்போது, அவர் அவசரப் பிரிவில் இருந்தார். நான் கொண்டு சென்ற உடைமைகளை, உதவியாளர் பூங்குன்றனிடம் கொடுத்தேன். சிறிது நேரத்தில், அவர் மயக்க நிலையில் இருந்து மீண்டார்.
அப்போது, தலைமை செயலராக இருந்த ராம மோகன ராவ், டி.ஜி.பி., ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். நான்கு நாட்களுக்கு பின், 'ஸ்கேன்' எடுக்க அழைத்து சென்றனர்.அப்போது, ஜெ.,வை பார்த்து வணக்கம் வைத்தேன். அதற்கு பின், நவ., 19ல், ஒருமுறை பார்த்தேன். மொத்தத்தில், நான்கு முறை, மருத்துவ மனையில் ஜெ.,வை பார்த்துள்ளேன்.
தவறான தகவல்
பன்னீர்செல்வம் உட்பட அனைத்து அமைச்சர்களும், தினமும் காலை, 9:30க்கு, மருத்துவமனை வந்து விடுவர். பிற்பகல், சாப்பிட வீட்டிற்கு சென்று, மீண்டும் மருத்துவமனைக்கு வந்து, இரவு, 10:00 மணிக்கு மேல் தான் செல்வர்.
ஜெ.,க்கு உடல்நிலை மோசமாக இருப்பதாக, டிச., 4ல் தகவல் கிடைத்தது. அப்போது, அதிகாலை, 3:15க்கு மருத்துவ மனைக்கு சென்றேன். அவர் இறந்ததாக, டிச., 5ம் தேதி, இரவு, 11:00 மணிக்கு தெரிய வந்தது. மருத்துவமனையில் இருந்து, ஆம்புலன்ஸ் வாகனத்தில், ஜெ., சடலம் கொண்டு வரப்பட்டபோது, போயஸ் கார்டனில், நான் தான் இறக்கி வைத்தேன். பின், சடங்குகள் செய்யும் போது, கார்டனில் பணியாற்றிய பெண்கள், டி.எஸ்.பி., கருப்பசாமி ஆகியோருடன் நானும் உடனிருந்தேன்.
அவரது கை விரல்களை, டி.எஸ்.பி., கட்டினார். அவரது கால் கட்டை விரல்களை, நான் தான் கட்டினேன். அவரது கால் துண்டிக்கப்பட்டதாக, தவறான தகவலை பரப்பி வருகின்றனர். கால்கள் துண்டிக்கப்பட்டிருந்தால், என்னால் எப்படி, அவரது கால் கட்டை விரல்களை கட்ட முடியும்?இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணை கமிஷனில், அய்யப்பனிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அவரது வழக்கறிஞர் பதிலளித்துள்ளார். இதனால், கோபமடைந்த நீதிபதி, 'உங்களிடம் கேள்வி கேட்கும்போது அல்லது நீங்கள் பதில் கூற நேரம் ஒதுக்கும்போது, பதிலளியுங்கள்' என, அவரை கண்டித்துள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (40+ 16)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply