மார்ச் 16 முதல் தியேட்டர்களை மூட முடிவு | விக்னேஷ் சிவன் மகளிர் தின வாழ்த்து | வட சென்னை, சமந்தா இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ? | சினிமாவில் களமிறங்கும் இரண்டு வாரிசுகள் | சூப்பர் ஸ்டார் இல்லை... ரஜினியிடம் ஏற்பட்ட மாற்றம் | அருவி எடிட்டருக்கு கிடைத்த மலையாளப்படம் | ராணா படத்தில் 'அவதார்' பட டெக்னீஷியன் | பரபரப்பை ஏற்படுத்தாத பிப்ரவரி மாதம் : பிப்ரவரி மாதப் படங்கள் ஓர் பார்வை | தென்னிந்தியாவில் தனுஷ் நம்பர் 1 | என் தந்தை மேக்கப் போட்டாலே முதலமைச்சர் ஆகிடுவாங்க : பி.வாசு |
நடிகை ராதாவின் இரண்டு மகள்களும் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாயினர். ஆனால் இருவராலும் கதாநாயகியாக தாக்குப்பிடிக்க முடியவில்லை. நடிப்பே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டனர்.
இந்நிலையில், ராதாவின் அக்காவான நடிகை அம்பிகாவின் மகன் ராம் கேசவ், ஒரு படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். 'கலாசல்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா கதாநாயகியாக நடிக்கிறார். இருவருக்குமே இது முதல் படம்.
அறிமுக இயக்குனர் அஸ்வின் மாதவன் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் கசுந்தர்.சி., பத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். இந்த படத்தில் அம்பிகாவும் நடிக்கிறார். அதாவது கதாநாயகன் ராம் கேசவுக்கு அம்மாவாகவே நடிக்கிறார்.