மார்ச் 16 முதல் தியேட்டர்களை மூட முடிவு | விக்னேஷ் சிவன் மகளிர் தின வாழ்த்து | வட சென்னை, சமந்தா இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ? | சினிமாவில் களமிறங்கும் இரண்டு வாரிசுகள் | சூப்பர் ஸ்டார் இல்லை... ரஜினியிடம் ஏற்பட்ட மாற்றம் | அருவி எடிட்டருக்கு கிடைத்த மலையாளப்படம் | ராணா படத்தில் 'அவதார்' பட டெக்னீஷியன் | பரபரப்பை ஏற்படுத்தாத பிப்ரவரி மாதம் : பிப்ரவரி மாதப் படங்கள் ஓர் பார்வை | தென்னிந்தியாவில் தனுஷ் நம்பர் 1 | என் தந்தை மேக்கப் போட்டாலே முதலமைச்சர் ஆகிடுவாங்க : பி.வாசு |
தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இன்று மகளிர் தின வாழ்த்துகளைச் சொல்லி வருகிறார்கள். மற்றவர்களின் வாழ்த்துகளை விட முக்கியப் பிரபலங்களின் வாழ்த்துகள் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கும்.
அந்த விதத்தில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகியாக இருக்கும் நயன்தாராவின் மனம் கவர்ந்தவரான விக்னேஷ் சிவன் மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவருடைய அம்மா, சகோதரி ஆகியோருடன் இருக்கும் புகைப்படம், நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படம் இரண்டையும் சேர்த்து வாழ்த்து செய்தி செய்தியைத் தெரிவித்துள்ளார்.
நம்மை முழுமையாக்கியவர்கள், நமக்கு அன்பு என்றால் என்ன என்பதைக் காட்டியவர்கள், நமது வாழ்க்கையை அர்த்தமாக்கியவர்கள், இந்த உலகத்தை அற்புதமான இடமாக வாழ, நமக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் அன்பை வழங்கியவர்கள், எல்லா அம்மாக்கள், சகோதரிகள், அன்பானவர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள் எனத் தெரிவித்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்புதான் அமெரிக்காவில் நயன்தாராவுடன் சுற்றுலா முடித்து வந்தவர், மீண்டும் நயன்தாராவுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அடுத்த புகைச்சலை ஆரம்பித்து வைத்துள்ளார்.