திருச்சி உஷா குடும்பத்திற்கு கமல் ரூ.10 லட்சம் நிதி | ரஜினி, கமலால் வெற்றிடத்தை நிரப்ப முடியாது : கவுதமி | நோட்டா உடன் களமிறங்கும் அர்ஜூன் ரெட்டி ஹீரோ | எம்ஜிஆர்., பாடல் அமலாபால் பட தலைப்பானது | 2017ம் ஆண்டு கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகை பார்வதி | மணிரத்னம் பட ஷூட்டிங்கில் இணைந்தார் அப்பாணி சரத் | தீவண்டி பர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட துல்கர் சல்மான் | பஹத் பாசிலை இயக்குநர் வில்லன் இயக்குநர் | மார்ச் 16 முதல் தியேட்டர்களை மூட முடிவு | விக்னேஷ் சிவன் மகளிர் தின வாழ்த்து |
திருச்சி, திருவெறும்பூரில், இன்ஸ்பெக்டர் காமராஜ் உதைத்ததில், கணவருடன் டூவிலரில் சென்ற உஷா என்ற கர்ப்பிணி பெண் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. மக்களை காக்க வேண்டிய போலீசாரே, மக்களை காவு வாங்குகின்றனர் என்ற கண்டன குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசனின், மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்த மகளிர் தின மாநாட்டில் கமல்ஹாசன் அறிவித்தார்.
தொடர்ந்து கமல் பேசுகையில், தாய் சொல்லை தட்டாதவன் நான்; அதனால் தான் மேடையில் இருக்கிறேன், வீரத்தின் உச்சம் தான் அகிம்சை, தமிழகத்தின் நலனும் வளமும் தான் எங்கள் முதல் கொள்கை, எந்த விஷயத்திலும் மையத்தில் இருந்து பார்த்தால் தான் நீதியும் நியாயமும் தெரியும்.
எனக்கு பெண்களை பற்றி என்ன தெரியும் என கேட்கிறார்கள், எனக்கு சேலை கட்ட தெரியும் என்பதை மீசை முறுக்கி சொல்வேன். தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் மற்ற மாநிலங்களை காட்டிலும் குறைவாக உள்ளது. ஆனால் இது போதாது, இன்னும் உயர வேண்டும். தமிழகத்தில் 3.60 கோடி பெண்கள் பிறக்காமலேயே இறந்து போய் உள்ளனர்.
திருச்சியில் இறந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளேன். ஓட்டுசாவடி என்பது கோவில் போன்றது. கயவர்களுடனும், திருடர்களுடனும் என்றும் கூட்டணி கிடையாது என சத்தியம் செய்கிறேன்
இவ்வாறு கமல் பேசினார்.