2017ம் ஆண்டு கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகை பார்வதி | மணிரத்னம் பட ஷூட்டிங்கில் இணைந்தார் அப்பாணி சரத் | தீவண்டி பர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட துல்கர் சல்மான் | பஹத் பாசிலை இயக்குநர் வில்லன் இயக்குநர் | மார்ச் 16 முதல் தியேட்டர்களை மூட முடிவு | விக்னேஷ் சிவன் மகளிர் தின வாழ்த்து | வட சென்னை, சமந்தா இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ? | சினிமாவில் களமிறங்கும் இரண்டு வாரிசுகள் | சூப்பர் ஸ்டார் இல்லை... ரஜினியிடம் ஏற்பட்ட மாற்றம் | அருவி எடிட்டருக்கு கிடைத்த மலையாளப்படம் |
வெற்றிமாறன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வட சென்னை'. இன்று இந்தப் படத்தின் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டார்கள்.
அதில் பலரையும் ஆச்சரியப்படுத்திய விஷயம் படத்தின் நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ். தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த 'காக்கா முட்டை' படத்தில் இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றவர். இதுவரை சிறிய நடிகர்களுடன் மட்டுமே ஜோடியாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், முன்னணி நடிகரான தனுஷின் முக்கியமான படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பலரையும் பொறாமைப்பட வைத்திருக்கிறார்.
'வட சென்னை' படத்தின் சில புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடிய மிகவும் யதார்த்தமான ஒரு ஜோடியாகத் தெரிகிறது. இந்தக் கதாபாத்திரத்தில் முதலில் சமந்தா தான் நடிக்க வேண்டியது. ஆனால், அவர் திடீரென விலகிவிட்டார். அதன்பின் அமலா பால் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்றார்கள். பின்னர் அதுவும் நடக்காமல் போக பின்னவர் வந்தவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.
'வட சென்னை' படம் யாருக்கு திருப்புமுனையாக அமையப் போகிறதோ இல்லையோ ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நிச்சயம் திருப்புமுனையாக அமையும் என்று இப்போதே பேச்சுகள் ஆரம்பமாகிவிட்டன.