புதுடில்லி : மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, காங்., மூத்த தலைவர், சிதம்பரத்தின் மகன், கார்த்தியிடம், உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி, நீதிமன்றத்தில், சி.பி.ஐ., மனு தாக்கல் செய்துள்ளது.
ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற தனியார், 'டிவி' நிறுவனம், வெளிநாட்டில் இருந்து முதலீடுகளை பெறுவதற்கு,
முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது அனுமதி அளிக்கப்பட்டதில், மோசடி நடந்ததாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இதில்,சிதம்பரத்தின் மகன், கார்த்திக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.
இதையடுத்து, கார்த்தியை, சி.பி.ஐ., அதிகாரிகள், சமீபத்தில் கைது செய்தனர். அவரை, முதலில், ஐந்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பின், இந்தகாவல், மேலும் மூன்று நாள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு அனுமதி கோரி, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீது, நாளை விசாரணை நடத்தப்படும் என, நீதிபதி, சுனில் ரானா தெரிவித்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து