புதுடில்லி : பா.ஜ.,வுக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் திரட்டும் வகையில், வரும், 13ல், முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த, காங்., மூத்த தலைவர், சோனியா முடிவு செய்துள்ளார்.
'பா.ஜ., - காங்., அல்லாத கட்சிகள், ஓரணியில் இணைய வேண்டும்' என, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான, சந்திரசேகர ராவ், சமீபத்தில் கூறினார்.
திரிணமுல் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான, மம்தா பானர்ஜி, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினுடன் கூட்டணி குறித்து பேச்சு நடத்தி உள்ளார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, காங்., மூத்த தலைவர், சோனியா அழைப்பு விடுத்துள்ளார். 13ல், தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த வரும்படி, அந்த அழைப்பில், சோனியா அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து, காங்., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் இணைக்க, சோனியா திட்டமிட்டு உள்ளார். இதற்காக, விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதில், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், அடுத்த லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (2)
Reply
Reply