சஞ்சய் தத்துக்கு உயில் எழுதிய ரசிகை | நிவின்பாலியும் கால்பந்து வீரர் ஆகிறாரா..? | சொந்தக் கட்சியிலேயே ராஜினாமா செய்த உபேந்திரா | 4 கோடி பார்வைகளைத் தாண்டிய 'சொடக்கு' | ரஜினிகாந்தை முந்திய மகேஷ் பாபு | தமிழ்நாட்டில் மட்டும் தொடரும் ஸ்டிரைக் | கரு குழந்தையை வளர்ப்பு மகளாக்க ஆசைப்பட்ட சாய்பல்லவி! | தமன்னாவின் கேரியரை மாற்றிய படம் | ரஜினிக்கு தேவை 2 கோடி உறுப்பினர்கள் | விசுவாசம் குறித்து பரவிய வதந்தி |
தமிழ்நாட்டில் நடிகர்கள் ஆரம்பிக்கும் கட்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. கமல்ஹாசன் ஆரம்பித்த 'மக்கள் நீதி மய்யம்' கடந்த மாத வரவு. அடுத்து ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க உள்ளார். அவர் என்ன பெயர் வைக்கப் போகிறார் என்று தெரியவில்லை. தற்போதுதான் உறுப்பினர்களை மிகத் தீவிரமாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
'ரஜினி மக்கள் மன்றம்' என்ற பெயரில் இணையதளம் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இணைதளம் ஆரம்பித்த போது லட்சக் கணக்கானோர் சேர்ந்ததாக தெரிவித்தார்கள். ஆனால், அதன் பின் அது பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லை. இருந்தாலும் அதில் உறுப்பினராகச் சேர பலரும் ஆர்வத்துடன் வருவதாகத் தெரிவிக்கிறார்கள்.
ரஜினிகாந்த் எதிர்பார்க்கும் உறுப்பினர் எண்ணிக்கை 2 கோடியாம். என்றைக்கு 2 கோடி பேர் அவருடைய மன்றத்தில் உறுப்பினர்களாகச் சேர்கிறார்களோ அன்று அவருடைய கட்சியின் பெயரை அறிவிக்க திட்டமிட்டுள்ளாராம். தமிழ்நாட்டில் ஏற்கெனவே பல கட்சிகள் உள்ளன. அவற்றில் பலரும் உறுப்பினர்களாக உள்ளார்கள். இன்னொரு பக்கம் கமல்ஹாசனும் மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
இதையெல்லாம் கூட்டினால் தமிழ்நாட்டின் மக்கள் தொகையை விட அவர்களது உறுப்பினர்கள் அதிகமாக இருக்கலாம். எப்படியோ தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக நடக்கும் அரசியல் என்பது விளையாட்டு போல நாளுக்கு நாள் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.