தமன்னாவின் கேரியரை மாற்றிய படம் | ரஜினிக்கு தேவை 2 கோடி உறுப்பினர்கள் | விசுவாசம் குறித்து பரவிய வதந்தி | பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராமிலும் இணைந்த ரஜினி | 102 வயது முதியவராக கலக்கும் அமிதாப்பச்சன் படம் மே 4-ல் ரிலீஸ் | கவரிமான் பரம்பரையில் விஷ்ணு விஷால் | வரலட்சுமி இப்போ ரொம்ப பிஸி | தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கட்டளையை மீறிய பாஸ்கர் ஒரு ராஸ்கல் | துல்கர் சல்மான் உடன் நடிக்கும் சின்னத்திரை ரக்ஷ்ன் | வெற்றிமாறன் - காதல் பழிவாங்கும் கதை |
வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் விசுவாசம். இந்த மாதம் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் துவக்கத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்காக ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் வேலைகள் நடந்து வருகிறது.
இப்படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். விசுவாசம், ஹாரர் திரில்லர் கதையில் உருவாகி வருவதாக செய்திகள் பரவி வந்தன. அதனால் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இப்போதே தொடங்கப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இந்த செய்தியை விசுவாசம் படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் மறுத்துள்ளது. அதோடு, இந்த படம் ஹாரர் கதையில் உருவாகவில்லை. கமர்சியல் எண்டர்டெய்ன்மென்ட் கதையில் உருவாகிறது. அஜித் ரசிகர்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.