சஞ்சய் தத்துக்கு உயில் எழுதிய ரசிகை | நிவின்பாலியும் கால்பந்து வீரர் ஆகிறாரா..? | சொந்தக் கட்சியிலேயே ராஜினாமா செய்த உபேந்திரா | 4 கோடி பார்வைகளைத் தாண்டிய 'சொடக்கு' | ரஜினிகாந்தை முந்திய மகேஷ் பாபு | தமிழ்நாட்டில் மட்டும் தொடரும் ஸ்டிரைக் | கரு குழந்தையை வளர்ப்பு மகளாக்க ஆசைப்பட்ட சாய்பல்லவி! | தமன்னாவின் கேரியரை மாற்றிய படம் | ரஜினிக்கு தேவை 2 கோடி உறுப்பினர்கள் | விசுவாசம் குறித்து பரவிய வதந்தி |
பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக சுயசரிதைகளை அதிகம் படமாக்கும் திரையுலகம் என்றால் அது மலையாள திரையுலகம் தான்.. விளையாட்டு வீரர்கள், கொள்ளைக்காரன், வரலாற்று வீரர்கள் என இந்த ஆண்டு மட்டுமே சுமார் பத்து படங்கள் வரை அறிவிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் ஜெயசூர்யா நடித்த கேப்டன் என்கிற படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. மறைந்த வி.பி.சத்யன் என்கிற கால்பந்து வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது. இந்தநிலையில் நடிகர் நிவின்பாலியும் இன்னொரு கால்பந்து வீரரான ஐ.எம்.விஜயனின் சுயசரிதையில் நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் இளைய அண்ணனாக நடித்தாரே அவர் தான் ஐ.எம்.விஜயன். கால்பந்தில் இவர் செய்துள்ள சாதனைகளையும் அதற்காக அவர் கடந்து வந்த கடினமான பாதைகளையும் மையப்படுத்தி இந்த படம் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
நிவின்பாலி கால்பந்து பயிற்சி எடுத்துவரும் சில புகைப்படங்கள் இதை உறுதி செய்வதாக அமைந்துள்ளன.