சஞ்சய் தத்துக்கு உயில் எழுதிய ரசிகை | நிவின்பாலியும் கால்பந்து வீரர் ஆகிறாரா..? | சொந்தக் கட்சியிலேயே ராஜினாமா செய்த உபேந்திரா | 4 கோடி பார்வைகளைத் தாண்டிய 'சொடக்கு' | ரஜினிகாந்தை முந்திய மகேஷ் பாபு | தமிழ்நாட்டில் மட்டும் தொடரும் ஸ்டிரைக் | கரு குழந்தையை வளர்ப்பு மகளாக்க ஆசைப்பட்ட சாய்பல்லவி! | தமன்னாவின் கேரியரை மாற்றிய படம் | ரஜினிக்கு தேவை 2 கோடி உறுப்பினர்கள் | விசுவாசம் குறித்து பரவிய வதந்தி |
தியேட்டர்களில் திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் திரையிடும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும், தென்னிந்தியத் திரையுலகினருக்கும் இடையே மோதல் இருந்தது. டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் அதிகக் கட்டணங்கள் வசூலிப்பதாகவும், அவற்றை குறைக்க வேண்டும் என்றும் திரையுலகங்கள் போர்க்குரல் எழுப்பினார்கள். அதைத் தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.
கேரளா மாநிலத்தில் ஒரு நாள் மட்டும் தியேட்டர்களை மூடி எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். கர்நாடகாவில் இது பற்றி பெரிதாக எந்தப் பிரச்சினையும் எழவில்லை. ஆனால், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக புதிய படங்களை வெளியிடாமல் நிறுத்தினார்கள்.
டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும், தெலுங்குத் திரையுலகினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் டிஜிட்டல் நிறுவனங்கள் 20 சதவீத கட்டணக் குறைப்புக்கு சம்மதித்தார்கள். ஆனால், 25 சதவீதம் குறைக்க வேண்டும் என தமிழ்த் திரையுலகம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அதற்கு டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் சம்மதிக்கவில்லை. இதனால், தமிழ்நாட்டில் மட்டும் ஸ்டிரைக் தொடர்ந்து நடைபெறுகிறது.
இதனிடையே, புதிய படங்கள் வெளிவராததால் தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் கூட்டம் இல்லாததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பல தியேட்டர்களை மூட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, தியேட்டர் உரிமையாளர்களும் நாளை சந்தித்து பேச உள்ளனர்.
மற்ற மாநிலங்களில் ஸ்டிரைக் முடிவுக்கு வந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் தொடர்கிறது.