சஞ்சய் தத்துக்கு உயில் எழுதிய ரசிகை | நிவின்பாலியும் கால்பந்து வீரர் ஆகிறாரா..? | சொந்தக் கட்சியிலேயே ராஜினாமா செய்த உபேந்திரா | 4 கோடி பார்வைகளைத் தாண்டிய 'சொடக்கு' | ரஜினிகாந்தை முந்திய மகேஷ் பாபு | தமிழ்நாட்டில் மட்டும் தொடரும் ஸ்டிரைக் | கரு குழந்தையை வளர்ப்பு மகளாக்க ஆசைப்பட்ட சாய்பல்லவி! | தமன்னாவின் கேரியரை மாற்றிய படம் | ரஜினிக்கு தேவை 2 கோடி உறுப்பினர்கள் | விசுவாசம் குறித்து பரவிய வதந்தி |
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக புதிய திரைப்படங்கள் வெளியாகாமல் உள்ளன. இதனால், சினிமாவைப் பற்றிய பேச்சுக்கள் குறைவாகவே இருக்கின்றன. இருந்தாலும் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில், ரஜினிகாந்தின் எம்ஜிஆர் பாசப் பேச்சு, அவருடைய காலா டீசர், 2.0 டீசர் லீக் என சினிமா செய்திகளில் ரஜினிகாந்த் தான் முன்னணியில் இருக்கிறார்.
கடந்த வாரம் 2ம் தேதி வெளியான 'காலா' டீசர் வெளியான நாளிலிருந்தே யு டியுப் டிரென்டிங்கில் முதலிடத்தில் இருந்து வந்தது. டீசருக்கு1 கோடியே 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துளளன. 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. வேறு எந்தப் படங்களின் டீசரும் 'காலா' டீசரை நெருங்க முடியாமல் டிரென்டிங்கில் பின்னால் இருந்தன.
ஆனால், நேற்று மாலை முதல் 'காலா' டீசர் டிரென்டிங்கில் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. மகேஷ் பாபு நடித்துள்ள 'பரத் அனி நேனு' படத்தின் டீசர் நேற்று வெளியானது. 24 மணி நேரத்திற்குள்ளாகவே 80 லட்சம் பார்வைகளைக் கடந்தும், 2 லட்சத்து 60 ஆயிரம் லைக்குகளைப் பெற்றுள்ள இந்த டீசர் டிரென்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துவிட்டது.
ரஜினிகாந்த் பட டீசரை பின்னுக்குத் தள்ளி மகேஷ் பாபு டீசர் முதலிடம் பிடித்திருப்பதை தெலுங்குத் திரையுலகத்தினல் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.